TNTET: எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

ஆசிரியர் தகுதி தேர்வு :

எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில் அனைவரின் கேள்வியும் அதுவே.




அதற்கான பதிவு பதில் இங்கே...

ஆசிரியர் தகுதி தேர்வு தயாராகும் முன் தெளிவாக பாட திட்டம் அறிதல் அவசியம்

பாட திட்டம் :
தாள் 1:
வகுப்பு 1 முதல் 8 வரை அனைத்து சமச்சீர் புத்தக பாடம் + உளவியல் = 120 + 30

தாள் 2 :
வகுப்பு 6 முதல் 10 வரை (தமிழ், அறிவியல் 12 வரை படிக்கலாம்)

தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பட்டதாரிகள்

தமிழ் : 30
ஆங்கிலம் : 30
ச.அறிவியல்: 60
உளவியல் : 30

அறிவியல், கணித பட்டதாரிகள் :

தமிழ்: 30
ஆங்கிலம் : 30
கணிதம் : 30
அறிவியல் : 30
உளவியல் : 30

இதற்கான தயாரிப்பு எங்கு எப்படி துவங்குவது?

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பாட வாரியான தோராய கால அட்டவணை

உதாரணமாக

தமிழ் வகுப்பு 6 : அரை நாள்
7 : அரை நாள்
8 : ஒரு நாள்
9 : ஒரு நாள்
10: ஒரு நாள்

மொத்தமாக 4 அல்லது 5 நாட்கள். அனைத்து பாடத்திற்கும் மொத்த கால அளவு தோராயமாக 25 முதல் 30 நாட்கள்.

இந்த 30 நாட்களும் தங்களது பங்களிப்பு உழைப்பு பொறுத்தே வெற்றி அமையும்.

மீதமுள்ள 30 நாட்களில் 2 திருப்புதலும் சில சுய தேர்வுகளும் நமக்கு நாமே செய்து கடின பகுதியை மீள்பார்வை செய்யலாம்

தமிழில் இலக்கண, செய்யுள் பகுதிகள்
கணிதம் நடைமுறை கணக்குகள்
அறிவியல் உயிரியியல் பகுதிகள்
சஅறிவியல் வரலாற்று பகுதிகள் கடினமானவை. இவற்றில் கூடுதல் பயிற்சி தேவை.

புத்தக வாசிப்பே சால சிறந்தது. சுய குறிப்புகளும் திருப்புதலில் உதவும். கூடுமான வரை மொபைல், கணினி வழி படிப்பதை தவிர்க்கவும். அவை உடல் சோர்வை உண்டாக்கும்.

மேலும் படிக்கும் போது மொபைல் பயன்பாட்டை குறைக்கவும். நேரத்தை அது உண்டுவிடும். வேண்டுமெனில் காலை மாலை அரை மணி நேரம் இணைய பகிர்வுகளை காணலாம்.

முக்கியமாக ஒரு பாடம் பாதியில் விட்டு விட்டு அடுத்த பாடம் செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக பாடங்களை தொடர்பு படுத்தி படியுங்கள்.

தேர்விற்கான கால இடைவெளி குறைவு . எனவே மற்ற அலுவல்களை தவிர்த்து முழு நேர பயிற்சியில் ஈடுபடுங்கள்.


எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை


All the best....

No comments:

Post a Comment

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...