ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

1. தமிழர்களின் வரலாற்றுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நூல்? - புறநானூறு

2. யவனர் மிலேச்சர் பற்றிய குறிப்புகள் உடைய நூல் - முல்லைப்பாட்டு

3. 'அப்பாவின் சினேகிதர்" என்ற சிறுகதைகளுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் - அசோகமித்திரன்

4. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் - மதுரை

5. வழக்கில் இல்லாத பழஞ்சொற்கள் மிகுதியாகப் பெற்றுள்ள சங்க நூல் - பதிற்றுப்பத்து

6. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்

7. தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

8. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை

9. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்

10. 'விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது

11. சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்

12. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி

13. 'கல்வியில் பெரியார்" இத்தொடரால் குறிக்கப்பெரும் சான்றோர்? - கம்பர்

14. சரதம் என்பதன் பொருள் - வாய்மை

15. 'திருச்சிற்றம்பலக்கோவை" என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

எட்டுத்தொகை நூல்கள் :

👉 ஐங்குறுநூறு (500 பாடல்கள்)

👉 குறுந்தொகை (401 பாடல்கள்)

👉 நற்றிணை (400 பாடல்கள்;)

👉 அகநானூறு (400 பாடல்கள்)

👉 புறநானனூறு (400 பாடல்கள்)

👉 கலித்தொகை (150 பாடல்கள்)

👉 பதிற்றுப்பத்து (80 பாடல்கள்)

👉 பரிபாடல் (22 பாடல்கள்)

No comments:

Post a Comment

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...