பூவிதழ் தமிழ் TET நூலின் ஆசிரியர்
தமிழில் எப்படி TET க்கு படிக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்ததுமே எங்களுக்கு தமிழ் பாட்டத்தில் எல்லாம் பிரச்சனை இல்ல இங்கிலிஷ் கணக்கு இந்த பாடங்களில் தான்னு ஒரே பல்லவிய எல்லோரும் பாடறாங்க
சரி கடந்த TET தேர்வுல தமிழ்ல எவ்ளோ மார்க் னு கேட்டா 25 , 26, 27 னு சொல்லுறாங்க ஏன் நம்மால் 30 வாங்க முடியலனு யாரும் யோசிச்சதா தெரியல
வேறு பாடத்துல கூடுதலாக 3,4 மார்க் வாங்க தமிழை விட எத்தனை மடங்கு கூடுதலாக படிக்க வேண்டி உள்ளது என யோசிச்சாலே தெரியும் தமிழ் ல கூடுதலா 3, 4 மார்க் வாங்க நாம் படிக்கவேண்டியது மத்த பாடத்தவிட ரொம்ப கம்மினு .
TET தமிழ் ல எப்படி 30/30 வாங்கலாம் னு சொல்லுறேன்
TNPSC வினா அமைப்பும் TET வினா அமைப்பும் வேற வேற அமைப்பு என நினைச்சா மட்டும் தொடர்ந்து படிங்க இல்லை என்றால் இத்தோட நிறுத்திகொள்ளுங்க . ஆனால் கீழே இருக்கிற வினாக்களுக்கு பதில் தெரியுமா னு பாத்துட்டு போங்க....
1. சின்ன பூ என்பது யாது ?
2. "பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க " இப்பாடல் எவ்வகை பாவால் ஆனது ? ( கடந்த TET தேர்வில் * வச்ச கேள்வி ஞாபகம் இருக்கா )
3. ஜெசிகா காக்கஸ் செய்த சாதனை என்ன ?
4. கடல் சுமந்தாள்; மலை சுமந்தாள்; கான் சுமந்தாள்;கால் நடை சுமந்தாள்; பல சுமந்தாள்.... என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது ? / எழுதியவர் யார் ?
5. வீனாகானம் விடியுமுன் கேட்டது
கர்ணாமிர்தம் காதுக்கு இனிமை ... என்று தன் முதல் பாடலை எழுதியவர் யார் ?
இந்த கேள்விகள் எல்லாமே பள்ளி பாடநூல்களில் இருந்தே தான் கேட்டிருக்கிறேன் .
இவற்றிற்கு விடை தெரியவில்லை என்றால் நான்கு காரணங்கள் இருக்கும்
1.உங்களிடம் உள்ளது பழைய சமச்சீர் புத்தகம்
2. ஏதோ ஒரு பயிற்சி மையம் அல்லது கடையில் வாங்கிய புத்தகத்தை படித்து கொண்டிருக்கலாம்
3. பாட நூலை இன்னும் TET க்கு ஏற்றபடி படிக்கவில்லை
4. பாடநூலில் பார்த்திருந்தாலும் இந்த செய்தி கூட கேள்வியாக வரும் என எண்ணாமல் படித்தது .
இப்போது சொல்லுங்க இதில் எத்தனை காரணங்களுக்கு நீங்க சொந்தக்காரங்க ?
ஆக TET தேர்வின் வினா அமைப்பும் TNPSC தேர்வின் வினா அமைப்பும் முழுவதுமாக இல்லையெனிலும் அடிப்படையில் மாறுபட்டது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் .
இனி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் 6-12 வகுப்புகளுக்குமான இந்த ஆண்டு வெளியான எல்லா பாடப்புத்தகத்தையும் வாங்கி கொள்ளவும் .11,12 மட்டும் பழையதே போதும் .( இப்பவே கண்ண கட்டுதா)
இனி
தமிழ் பாடத்தை எப்படி படிப்பது என பார்க்கலாம் வாங்க ...
தமிழில்
1.செய்யுள்
2.உரைநடை
3.மொழித்திறன் பயிற்சி
4.இலக்கணம்
5.வளரறி செயல்பாடுகள்
6.சிறப்பு தகவல்கள்
7.வாழ்க்கை திறன்கள்
8.மதிப்பீட்டுக் கல்வி
8.அறிந்து கொள்க
9.துணைப்பாட கட்டுரை,கதை,ஆளுமைகள்
10.கீழுள்ள உரைநடையை பேசிப்பழகு
11.வகுப்பறை திறன்கள்
ஆகிய பல்வேறு தலைப்புகளில் உள்ள தகவல்கள் பாடநூல்களில் உள்ளன
ஏன் புதிய நூல்கள் என்று சொன்னேன் என்றால் பல பாடங்கள் மாற்றப்பட்டு உள்ளன
முப்பருவம் என்பதால் ஆரம்பத்தில் இருந்த ஒரு இயல் நீக்கப்பட்டது . முப்பருவத்தில் ஒரு சில பாடங்கள் நீக்கப்பட்டன எ.கா அனந்த ரங்கம் பிள்ளை , வேருக்கு நீர் போன்று பல
, அடுத்ததாக CCE வந்த பிறகு வளரறி செயல்பாடுகளுக்காக புதிய பகுதிகள் சேர்கப்பட்டன,
பாடநூல் கருத்துக்களோடு ஒட்டிய அறிந்து கொள்க பகுதியும் பின்பு சேர்க்கப்பட்டது .
இனி செய்யுள் படிப்பது பற்றி காண்போம்
--------------------------
செய்யுள் பகுதியை பொருத்தவரை அதன் பொருளை படிப்பதோடு நில்லாமல் அச்செயுளில் உள்ள முக்கிய தொடர்களையும் படிக்க வேண்டியது அவசியம்
எ.கா
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் / நரகத்தில் இடர்படோம் நடலை இல்லோம் .....
இது எவ்வகை பாடல்
1. சிந்து
2.கும்மி
3. தாண்டகம்
4.கண்ணி
இதில் நடலை என்ற சொல்லிற்கு இணையான ஆங்கில சொல் எது
என்பன போன்ற வினாக்கள் வரலாம் .
இலக்கண குறிப்புகள் இடம் பெறலாம்
மல்லல் நெடுமதில் - இலக்கண குறிப்பு தருக .
பலரும் பண்புத்தொகை என இதற்கு விடை எழுதுவர் ஆனால் மல்லல் என்பது உரிச்சொல் ஆகவே விடை உரிச்சொல் தொடர் .
அடுத்ததாக சொற்பொருள் இணைத்தல்
வைதருப்பம் - மதுரகவி
கௌடம் - சித்திரகவி
பாஞ்சாலம். - வித்தாரகவி
மாகதம். -ஆசுகவி
இது போன்றோ அல்லது வேறுவகையிலோ கேட்கப்படலாம்
ஆசிரியர் குறிப்பு நூல்குறிப்புகளிலிருந்தும் வினா வரும்
உரைநடை
-------- யைப் பொருத்தவரை நேரடியான வினாக்களே இடம் பெறுகின்றன. இதற்கு அனைவருமே விடையளித்து விடுகிறோம் .
மொழித்திறன் பயிற்சி .
மொழித்திறன் பயிற்சியை பரிசோதிப்பதாக அமையும் மரபுத்தொடர்கள்
வழு, பிறமொழி,தொடர் வகைகள்,ஆகியவை
மேலும் மொழிப்பயிற்சியை விளக்கவரும் தொடர்களின் கருத்துகள் அடிப்படையில் அமையும் .
இலக்கணத்தை பொருத்தவரை எழுத்திலக்கணம் சொல் இலக்கணம் நேரடியான வினாக்களாகவும் பொருள் இலக்கணம் பொருத்துக வடிவிலான வினாக்களாகவும்
கருப்பொருள் பொருத்துக
நூற்பா அடிப்படையிலும் வினா அமையும்
வட்கார் மேல் செல்வது---- திணை !
வளரறி செயல்பாடுகளில் -
இருந்து நேரடி வினாக்கள் அமையும்
கால்டுவெல் மறைந்த ஊர் எது ?
வ.சுப.மாணிக்கம் என்பதில் வ என்பது எதைக் குறிக்கிறது?
சிறப்புத் தகவல்கள்
---------------
என்பவை அந்த பாடம் தொடர்பாக கூடுதலாக கூறப்பட்ட தகவல்களாகும்
திருக்குறள் பாதுகாக்கப்பட்டுள்ள அணு துளைக்காத இடம் எது ?
வாழ்க்கைத்திறன்கள் / மதிப்பீட்டு கல்வி ஆகிய வற்றில்
நேரடி வினாக்கள் இடம் பெறும்
ஸ்டீன் மெட்ஸ் என்பவர் யார் ?
அறிந்து கொள்க என்பதில் இருந்தும் நேரடி வினாக்களே இடம் பெறும்
உடமை என முடியும் அதிகாரங்கள் 10 உள்ளன , திருக்குறளோடு தொடர்புடைய எண் ஏழு , கொங்குதேர் வாழ்க்கை்... குறுந்தொகையின் இரண்டாவது பாடல் போன்று ஆங்காங்கே கட்டம் கட்டப்பட்டு தரப்பட்டுள்ள தகவல்கள்.
9 துணைப்பாடம்
நேரடி வினாக்கள்
10. உரைநடையை பேசிப் பழகு போன்றவற்றிலும் நேரடி வினாக்கள்
11. வகுப்பறை திறன்களிலும் நேரடி வினாக்கள் இடம் பெறும் .
எனவே இந்த வகையில் தயாரானால் 30/30 மதிப்பெண்கள் பெறலாம் நாங்கள் எழுதியுள்ள நூல் மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில்
பூவிதழ் TET தமிழ்
தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலே 10 மாதிரி வினாத்தாள்கள் உள்ளன
நூல் வேண்டுவோர் அழைக்கவும்
9943675446,
பயிற்சி மையங்களுக்கு செல்வேர் பழைய TNPSC வினாத்தாள்களா என கவனிக்கவும் .
ஆகவே நான் சொன்ன பல்வேறு செய்திகளின் அடிப்படையில் நீங்கள் தமிழ்பாடத்தினை படித்து தயாரானால் TET தேர்வில் நிச்சயம் 30/30 வாங்குவது உறுதி .
வாழ்த்துக்களுடன்
- பூவிதழ் உமேஷ்
பூவிதழ் தமிழ் TET
Poovithal English grammar TET
நூல்களின் ஆசிரியர்
9943675446
No comments:
Post a Comment