கல்வித்துறையில் நிர்வாக அளவில் சீர்திருத்தம்
தமிழ்நாட்டில், பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள், . . . என பல வகையான பள்ளிகள் உள்ளன.
அவை கீழ்கண்டவாறு பல வகையான பள்ளிகளாக உள்ளன.
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் [State Board Schools]
மெட்ரிக் பள்ளிகள் [Matriculation Schools]
ஓரியண்டல் பள்ளிகள் [Oriental Schools]
ஆங்கிலோ இந்திய பள்ளிகள் [Angilo-Indian Schools], . . .
அவை அரசின் பல துறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
பள்ளிக் கல்வித்துறை [Elementary, Middle, High, Higher Secondary, Matriculation, Oriental, Angilo-Indian Schools], நகராட்சித்துறை [Municpal Schools], மாநகராட்சித்துறை [Corporation Schools], ஊராட்சித்துறை [Panchayat Union Schools], வனத்துறை [Forest Schools], ஆதிதிராவிட நலத்துறை [Adi Dravida Welfare Schools] etc.
அவற்றை
1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட, இடைநிலை ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் தொடக்கப் பள்ளிகள் [Elementary Schools]
6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட, பட்டதாரி ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகள் [Secondary Schools]
11 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படும் மேல்நிலைப் பள்ளிகள் [Higher Secondary Schools]
என மூன்று வகையான பள்ளிகள் மட்டுமே உள்ளவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மாநில அளவில் பல துறைகளால் நிர்வகிக்கப்படும் இப் பள்ளிகளில் சிலவகைப் பள்ளிகள் கட்டமைப்பு, கல்வி கற்பித்தல், கல்வி கற்றல், நிர்வகித்தல் மற்றும் பல வகையில் நல்ல தரத்துடன் இருக்கின்றன. சிலபல பள்ளிகள் அதற்கு மாறாக இருக்கின்றன.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறை மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுவனவாக மாற்றியமைக்க வேண்டும்.
மாநில அளவில், தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குநர் [Director – Elementary] அவர்களாலும், உயர்நிலைப் பள்ளிகள் உயர்நிலைக் கல்வி இயக்குநர் [Director – Secondary] அவர்களாலும், மேல்நிலைப் பள்ளிகள் மேல்நிலைக் கல்வி இயக்குநர் [Director – Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும்.
மாவட்ட அளவில் அனைத்து வகைப் பள்ளிகளும் முதன்மைக் கல்வி அலுவலர் [CEO] அவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். கல்வி மாவட்ட அளவில் தொடக்கப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கநிலை) [DEO – Elementary] அவர்களாலும், கல்வி மாவட்ட அளவில் உயர்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (உயர்நிலை) [DEO – Secondary] அவர்களாலும், கல்வி மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (மேல்நிலை) [DEO – Higher Secondary] அவர்களாலும், ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் [AEEO] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும்.
சுமார் 75 பள்ளிகளுக்கு (அல்லது) ஐந்து ஒன்றியங்களுக்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் என்ற வகையில் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது பள்ளிகளைத் திறம்பட நிர்வகி்க்கவும், பள்ளிகளின் தரத்தைப் பார்வையிடவும், மாணவர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தவும், மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தினை உயர்த்தவும் உதவியாக இருக்கும்.
இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் ( உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ( மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), . . . என்றவாறு பதவி உயர்வு வழங்கலாம்.
பட்டதாரி ஆசிரியர்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ( மாவட்டக்கல்வி அலுவலர் (உயர்நிலைக்கல்வி), முதன்மைக் கல்வி அலுவலர், . . . என்றவாறு பதவி உயர்வு வழங்கலாம்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ( மாவட்டக்கல்வி அலுவலர் (மேல்நிலைக்கல்வி), முதன்மைக் கல்வி அலுவலர், . . . என்றவாறு பதவி உயர்வு வழங்கலாம்.
உரிய தேர்வு அல்லது துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களை தலைமையாசிரியர் மற்றும் ஆய்வு அலுவலர் பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கலாம். ஆய்வு அலுவலர் பதவிகளை இப்போதுள்ள நடைமுறையின்படி 50% நேரடி நியமனம், 50% பதவி உயர்வு என நிரப்பலாம்.
ஒவ்வொரு தொடக்கப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது நான்கு இடைநிலை ஆசிரியர், ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது ஆறு பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு இளநிலை உதவியாளர், ஒரு ஆய்வக உதவுயாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு துப்புரவாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது மூன்று பாடப்பிரிவுகள் மற்றும் ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு உதவியாளர், ஒரு பதிவெழுத்தர், ஒரு ஆய்வக உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு துப்புரவாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
மாணவர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அல்லது சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு, RTE சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்புகளை மட்டும் தனித்து பிரித்து புதியதாக உயர்நிலைப் பள்ளியாகவும், 1 முதல் 5 வகுப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளியாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறே மாணவர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அல்லது சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை மட்டும் தனித்து பிரித்து புதியதாக மேல்நிலைப் பள்ளியாகவும், 6 முதல் 10 ஆம் வகுப்புகளை மட்டும் கொண்ட உயர்நிலைப் பள்ளியாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ஒரே ஊரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளை மிக எளிதாக தேவைக்கேற்ப அல்லது வசதிக்கேற்ப 6 முதல் 10 ஆம் வகுப்புகளை மட்டும் உள்ள இருபாலர் பயிலும் உயர்நிலைப் பள்ளியாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை மட்டும் உள்ள இருபாலர் பயிலும் மேல்நிலைப் பள்ளியாகவும் மாற்றியமைக்க முடியும்.
சுமார் 10 கி.மீ. க்குள் உள்ள இரு உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளிகளுக்கு சில ஆசிரியர்களை வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரியும் வகையில் ஆணை வழங்குவதன் மூலம் புதிய ஆசிரியர் நியமனங்கள் இல்லாமலும், பணி நிரவல் இல்லாமலும் இதைச் செயல்படுத்த இயலும்.
எதிர்காலத்தில் புதியதாக உயர்நிலைப் பள்ளியையும், மேல்நிலைப் பள்ளியையும் துவக்கலாம். RMSA திட்டத்தின் மூலம் அல்லது NABARD வங்கி நிதி உதவி மூலம் அல்லது பொதுமக்கள் பங்களிப்பு மூலம் ஒரே ஆண்டில் மேல்நிலைப் பள்ளியை முழு கட்டமைப்பு உடைய பள்ளியாக மாற்றியமைக்கலாம்.
ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ஐந்து லட்சம் கொடுப்பவர்கள் பெயரை உயர்நிலைப் பள்ளியின் பெயரோடு இணைத்துக்கொள்ளவும், இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் பத்து லட்சம் கொடுப்பவர்கள் பெயரை உயர்நிலைப் பள்ளியின் பெயரோடு இணைத்துக்கொள்ளவும், மூன்று ஏக்கர் நிலம் மற்றும் இருபது லட்சம் கொடுப்பவர்கள் பெயரை மேல்நிலைப் பள்ளியின் பெயரோடு இணைத்துக்கொள்ளவும் வழிவகை செய்வதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பைப் பெற இயலும். ஐந்து லட்சம் கொடுப்பவர்கள் பெயரை வகுப்பறைகளுக்கு வைக்கலாம். பத்து லட்சம் கொடுப்பவர்கள் பெயரை மூன்று வகுப்பறை கட்டிடத்திற்கு வைக்கலாம். இருபது லட்சம் கொடுப்பவர்கள் பெயரை ஆறு வகுப்பறை கட்டிடத்திற்கு வைக்கலாம்.
மிகச் சரியாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால் அடுத்த மூன்று ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே கொண்டதாக மாற்றியமைக்க முடியும்.
விலையில்லா பஸ்பாஸ் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு எந்தவொரு பிரச்சனை ஏற்படாமலும், பொதுமக்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்களின் எந்தவொரு எதிர்ப்பு இன்றியும், முழு ஒத்துழைப்போடும் மேற்கூறியவற்றை நடைமுறைப்படுத்த இயலும்.
நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும்போது பட்டதாரி ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படுவதால் அரசாங்கத்திற்கான செலவினம் அதிகரிக்காது. அப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு துவக்கத்தின்போது ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும், 10 ஆம் வகுப்பு துவக்கத்தில் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடமும், 300 மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடமும் வழங்கலாம்.
ஆசிரியர் கல்வியில் சீர்திருத்தம்
இன்றைய நல்ல மாணவன் நாளைய சிறந்த குடிமகன். இன்றைய மாணவன் நாளைய வலிமையான, நவீன இந்தியாவின் தூணாக விளங்கக் கூடியவன். கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். “கணிப்பொறி அறிவு பெறாத ஆசிரியர் அரை ஆசிரியர்” என்பது இன்றைய நடைமுறை உண்மையாகும்.
நம்மை விட இன்றைய மாணவன் அதிக திறமைசாலி என்பதையும், அவனுக்குத் தக்கவாறு தகுதியுடையவராக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பிறவியிலேயே கற்பிக்கும் திறன் பெற்றவர் மிகச் சிறந்த ஆசிரியர். அவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். கற்பிக்கும் திறன் மிகுந்த, கற்பிக்கும் பொருளில் போதுமான அளவில் புலமை பெற்ற, அன்றாட நாட்டு மற்றும் உலக நடப்புகளை அறியும் ஆர்வம் மிக்க, பல்லூடக அறிவு பெற்ற, நல்ல சமூகத்தை உருவாக்கும் சிந்தனை மிகுந்த, மாணவ, மாணவியர்களிடையே ஏற்படும் காழ்ப்புணர்ச்சியை பக்குவமாக தீர்க்கும் வழி வகை தெரிந்த, மாணவர்களின் மனச்சிக்கல்களுக்கு, மனப்பிறழ்சிகளுக்கு நல்ல ஆலோசனை வழங்கும், சிறிதளவாவது பொதுநல நோக்குடைய ஆசிரியர்களை உருவாக்க வேண்டியது அவசியம்.
இளங்கலை பட்டபடிப்பில், வரலாறு படிக்காமலேயே வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்கள், புவியியல் படிக்காமலேயே புவியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், இயற்பியல் படிக்காமலேயே இயற்பியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், வேதியியல் படிக்காமலேயே வேதியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், உயிரியல் படிக்காமலேயே உயிரியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிறைந்ததுதான் நமது பள்ளிகள். அதையும் மீறி பல சாதனைகளைச் சாதிக்கும் பல ஆசிரியர்கள் உள்ளனர்.
போட்டிகள் நிறைந்த இன்றைய நாளில், அதிவேக அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டிய இன்றைய சூழ்நிலையில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டை மட்டும் படித்த ஆசிரியர்கள் மற்றவற்றை வெற்றிகரமாக கற்பித்தல் என்பது எந்த அளவு நடைமுறை சாத்தியமானது அறிந்துகொள்ளக் கூடிய, புரிந்து கொள்ளக் கூடிய, நிரூக்கத் தேவையில்லாத உண்மை.
எனவே, ஆசிரியர் பயிற்சி முறையில் மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றங்களைக் களையும் தொழிலைச் செய்யும் ஆசிரியர் இன்றைய காலகட்டத்திற்கேற்ப கற்பிக்கும் திறன் பெற்றவராகவும், பல்துறை அறிவுடையவராகவும், கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி உடையவராகவும், சிறந்த ஆளுமை உடையவராகவும், நல்லதொரு வழிகாட்டும் தன்மையுடையவராகவும், பொதுநல நோக்கு உடையவராகவும், உருவாக்க வேண்டியது அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
எனவே, இடைநிலை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் எனும் மூன்று வகையான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் கல்வியியல் கல்லூரிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு “பட்டையம்” [D. T. Ed.].
நான்கு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு “இளங்கலைப் பட்டம்” [B. Ed.].
மேலும் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு “முதுகலை பட்டம்” [M. Ed.].
இடைநிலை ஆசிரியர்: பட்டையப் பயிற்சியில், 1 முதல் 5 வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி, நன்னெறிக் கல்வி, . . . ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்: இளங்கலைப் பட்டப் பயிற்சியில், 6 முதல் 10 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு (& கணக்குப்பதிவியல்) அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் (குடிமையியல், பொருளாதாரம், வணிகவியல்) பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 10 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி, நன்னெறிக் கல்வி, . . . ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்: முதுகலை பட்டப் பயிற்சியில், 11 முதல் 12 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியலில் ஏதேனும் ஒரு பிரிவு அல்லது சமூக அறிவியலில் ஏதேனும் ஒரு பிரிவு, etc. ஒரு பாடம், அதைக் கற்பிக்கும் முறைகளும், 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல், கல்வி வரலாறு, மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி, நன்னெறிக் கல்வி, . . . ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்: உடற்பயிற்சிகள், யோகா, பலவகை விளையாட்டுகள் கற்பிக்க வல்லவராகவும், அவசர காலத்தில் முதலுதவி வழங்க போதுமான அளவிற்கு மருத்துவ அறிவு பெற்றவராகவும், மக்கள் தொடர்பு குறித்த ஆழ்ந்த புலமை பெற்றவராகவும், ஆளுமைப்பண்பு மற்றும் தலைமைப்பண்பு உடையவராகவும் உடற்பயிற்சி ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும்.
மதிப்புக்கல்வி (கலை) ஆசிரியர்: மாணவ, மாணவியர்களிடம் உள்ள கலைத் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில், அவர்களிடம் நன்னெறிகளை வளர்க்கும் வகையிலும், அவர்கள கற்பனையைத் தூண்டும் வகையிலும், அவற்றை வெளிப்படுத்தும் கலையில் திறனை வளர்க்கும் வகையிலும் திறமையுடையவராக இவ்வாசிரியர் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் எளிய பொருள்களை, ஒதுக்கப்பட்ட பொருள்களை மீட்டுருவாக்கம் செய்து அவற்றை பயன்படுத்தும் வகையில் மாற்ற பயிற்சி பெற்றவராகவும், பயிற்சி அளிப்பவராகவும், கணினியைக் கையாளும் திறமையுடையவராகவும், பல்லூடகப் பயிற்சி பெற்றவராகவும் உருவாக்கப்பட வேண்டும்.
கணினி ஆசிரியர்: எதிர்கால இந்தியாவை உருவாக்கவல்ல இன்றைய மாணவர்கள், கணினியை இயக்கும் வல்லமையைப் பெற்றிட, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கணிப்பொறிகளை இயக்கவும், கணினிகளை இயக்க பயிற்சி அளிக்கவும், ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் கணினி ஆசிரியரை நியமித்திட வேண்டும். ஓவிய மற்றும் கலை ஆசிரியர்களை கணிப்பொறி ஆசிரியராக்கும் வண்ணம் அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்னெறி ஆசிரியர்: உலக அளவில் பல முன்னேறிய நாடுகள் வியந்து போற்றிப் புகழ்ந்து, பின்பற்ற ஆசைப்படும் பண்பாடு நம் தமிழர் பண்பாடு. எல்லா நாகரீகங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது நம் தமிழர் பண்பாடு. இன்றைய தொலைகாட்சி, தரமற்ற சில திரைப்படங்கள், செல்போன் மற்றும் இணையம் மூலம் மாணவ, மாணவியர் ஈர்க்கப்பட்டு நம் பண்பாட்டிலிருந்து மாறிச் செல்லும் போக்கு இப்பொழுது சிறிது, சிறிதாக ஆனால் மிக விரைவாக நிகழ்ந்து கொண்டிருகிறது. இதைச் சரியாக்க நீதிபோதனை, அறக்கருத்துக்கள், நல்வழி காட்டி சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் நூலகத்தையும், அதை நிர்வகிக்கவும், மாணவ, மாணவியர்களுக்கு நன்னெறிக் கல்வி வழங்கவும் ஒரு நூலகர் (BLIS பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்) பணியிடத்தையும் வழங்க வேண்டும். நிதி வசதி இடம் தராது எனில் பள்ளியிலுள்ள சத்துணவு அமைப்பாளரை இப்பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
அனைத்து ஆசிரியர்களும் கணினியைப் பயன்படுத்த வல்லவராகவும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராகவும், மொழிமாற்றம் செய்வதில் வல்லமை உள்ளவராகவும் உருவாக்கப்பட வேண்டும். கணக்கையும், கணக்குப்பதிவியலையும் கற்பிக்க வல்லவராக கணக்கு ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். தாவரவியலையும், விலங்கியலையும், வேதியியலையும், இயற்பியலையும் கற்பிக்க வல்லவராக அறிவியல் ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும். வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளாதாரம், வணிகவியல், . . . ஆகியவற்றைக் கற்பிக்க வல்லவராக சமூக அறிவியல் ஆசிரியர் உருவாக்கப்பட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் [D.T.Ed.] உருவாக்க, மூன்று ஆண்டு கால அளவுடைய பட்டயப்படிப்பு; பட்டதாரி ஆசிரியர் [B.Ed.], உடற்கல்வி ஆசிரியர் [B.P.Ed], மதிப்புக்கல்வி ஆசிரியர் [B.V.Ed], கணினி ஆசிரியர் [B.C.Ed] நான்கு ஆண்டு கால அளவுடைய பட்டயப்படிப்பு; முதுகலை ஆசிரியர் [M.Ed], உடற்கல்வி இயக்குநர் [M.P.Ed], மதிப்புக்கல்வி இயக்குநர் [M.V.Ed], கணினி இயக்குநர் [M.C.Ed] ஆகியோரை உருவாக்க, இரண்டு ஆண்டு கால அளவுடைய புதிய வகை கல்வியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்.
பட்டயப் படிப்பு [D.T.Ed.] படித்தவர்கள், மூன்றாம் ஆண்டு பட்ட வகுப்பில் [B.Ed.], சேர்ந்து படிக்க பரிந்துரை செய்யலாம். பொறியியல் கல்லூரிகளில் இப்பாடப்பிரிவுகளை பயிற்றுவிக்க அனுமதி அளிக்கலாம். அனைத்து வகை படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு வைத்து அவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே அனுமதி கொடுக்க வேண்டும்.
ஒளி, ஒலிக் காட்சி அறை: தமிழ் நாட்டின் கல்வித் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த ஒவ்வொரு பள்ளியிலும் அதிநவீன ஒளி, ஒலிக் காட்சி அறை [AUDIO VISUAL ROOM (or) SMART CLASS ROOM] அமைத்திட வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடு அதிநவீனமடையச் செய்ய வேண்டும்.
மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் கணிப்பொறிகளை பள்ளிகளுக்கு வழங்கி கணினி ஆய்வகம் அமைக்கலாம். அதை நிர்வகிக்க ஒரு கணிப்பொறி ஆசிரியரை நியமிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், கணிப்பொறிகளைக் கொண்டதாகவும், அனைத்து மாணவ, மாணவியர்களும் கணினிக்கல்வி பெற்றவராகவும், கணினியை இயக்கும் வல்லமை பெற்றவராகவும் உருவாவர். மூன்று ஆண்டுகளிலேயே அனைத்து பள்ளிகளும் கணினி சார்ந்து தன்னிறைவு எய்தும். ஆண்டுதோறும் கணினிகளை வழங்கும் செலவினத்தில் கணினி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலும்.
பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி
தமிழக அரசின் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் [Trimester pattern and CCE] இடைநிலைப் பள்ளி அளவில் முழுமையாக செயல்படுத்த இயலும்.
வளரறித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் என்றோ அல்லது வளரறித் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என்றோ நடைமுறைப்படுத்தலாம்.
முதலிரண்டு பருவங்களுக்கு பாடப்பகுதி முழுமையிலும் ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும் வகையிலான தேர்வாக மட்டுமே நடத்தலாம். அதற்கு [TNPSC தேர்வுகள், TET, etc தேர்வு போல்] OMR coding sheet இல் விடையளிக்கச் செய்யலாம். 2 அல்லது 2½ மணி நேரத்தில் எழுதக்கூடிய வகையில் 150 வினாக்கள் கொண்டதாக தேர்வை அமைக்கலாம். வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், சரியா தவறா என காணல், தனியான ஒன்றைக் காணல், பொருத்துதல், படத்தில் குறிக்கப்பட்டதைத் தேர்ந்தெடுத்தல், . . . என அமைக்கலாம். இதைத் திருத்துவது எளிது. இத்தகைய தேர்வுகளை எழுதி பயிற்சி பெறுவதால், எதிர் காலத்தில் போட்டித்தேர்வுகளை எழுதுவது மாணவர்கள் எளிமையாகிவிடும். மாணவர்களின் கற்றல் அடைவு மேம்படும்; நுண்ணறிவு வளரும்; பாடங்களை ஆழமாக கற்பதால் அலசி ஆராயும் திறனும், கற்றதைப் பயன்படுத்தும் திறனும் வளரும்.
இத்தகையத் தேர்வுகள் மாணவரின் படிக்கும் ஆற்றலையும், கற்றதைப் பயன்படுத்தும் லாவகத்தையும், படித்ததை உட்கிரகிக்கும் வேகத்தையும், . . . மதிப்பிடுவதாக அமையும். அகில (இந்திய) அளவில் போட்டித் தேர்வில் நம் மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறுவர்.
மூன்றாம் பருவ முடிவில், அப்பருவத்தின் பாடப்பகுதியில் சிறு, குறு, பெரு வினாக்கள் கொண்டதாக இப்போதையத் தேர்வு போலவே நடத்தலாம்.
முதலிரண்டு பருவங்களின் பாடப்பகுதி அடிப்படைப் பாடங்களை அதிகமாகக் கொண்டதாகவும், புரிந்துகொள்ளும் திறனை அதிகப்படுத்துவதாகவும், பயன்பாடுகளைத் தெரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கலாம்.
முப்பருவ முறைக்கு பதிலாக இரு பருவ முறையாகவும் செயல்படுத்தலாம். முதல் பருவத்தேர்வு ஐந்து நாட்களில் ஐந்து பாடங்களுக்கு OMR coding sheet மூலம் நடைபெறும் ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொண்ட தேர்வாகவும், இரண்டாம் பருவத் தேர்வு ஏழு நாட்களில் ஐந்து பாடங்களுக்கு எழுத்துத் தேர்வாகவும் இருக்கலாம்.)
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு நடத்தி அதற்கான மதிப்பெண்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைப்பது போலவே வளரறி மதிப்பெண்களின் தரங்களை (Grades) ஒப்படைத்துவிடலாம்.
மூன்று அல்லது இரண்டு பருவங்களின் வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பெண்களின் தரங்களை (Grades) மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறச் செய்வதன் மூலம் மாணவர் தரத்தினை எளிதில் அறியலாம். மூன்று அல்லது இரண்டு பருவங்களின் மதிப்பெண்களின் சராசரி கண்டு தரம் வழங்கலாம்.
மாவட்ட அளவில் அல்லது கல்வி மாவட்ட அளவில் தேர்வுகளை நிர்வகிக்கும் கணினி மையங்களை அமைத்து, OMR coding sheet ஐத் திருத்தவும், வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பெண்களை உள்ளீடு செய்து தொகுப்பு மதிப்பெண் தயாரித்தலும் எளிது. இதற்கு கணினி ஆசிரியர்களையும், ஆய்வக உதவியாளர்களையும், அலுவலக உதவியாளர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சுயநிதிப் (மெட்ரிக்) பள்ளிகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தற்போதுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டு, மெட்ரிக் பள்ளி ஆய்வர்களிடம் மாவட்ட அளவில் உருவாக்கப்படும் கணினி மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்து விடலாம்.
QUESTION PAPER BLUR PRINT [வினாத்தாள் வடிவமைப்பு]
வினாத்தாளில் உள்ள வினாக்களில், 50% வினாக்கள் மிக எளிமையாகவும், 20% வினாக்கள் எளிமையாகவும், 20% வினாக்கள் கடினமாகவும், 10% வினாக்கள் திறமையைச் சோதிக்கும் வகையிலும், மிகக் கடினமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறுவதாக மட்டும் இருக்கக்கூடாது.
சில பாடப்பகுதிகளை படிக்காமலேயே 100% மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் இன்றைய வினாத்தாள் வடிவமைப்பு உள்ளது. எல்லா பாடப் பகுதியையும் ஆழ்ந்து படித்தால் மட்டுமே 90% மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் வகையில் வினாத்தாள் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் கட்டாய வினா இடம் பெற வேண்டும்.
விடையெழுதும் வினாக்களை அதிகமான வினாக்களிலிருந்து தேர்வு செய்து எழுதும் வகையினை மாற்றி, குறைவான வினாக்களிலிருந்து தேர்வு செய்யும் வகையில் அமைக்கப்பட வேண்டும். மெல்லக் கற்கும் மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெறும் வகையில் 50% வினாக்கள் மிக எளிமையாக அமைக்கப்பட வேண்டும்.
பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளின் அரசுப் பொதுத்தேர்வை ஒரே சமயத்தில் நடத்தினால் தேர்வுத்துறையின் சிரமங்களைக் குறைக்கலாம்.
ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத அனுமதிக்கலாம். பத்தாம் வகுப்பில் 10 பேர், 11 ஆம் வகுப்பில் 10 பேர், 12 ஆம் வகுப்பில் 10 பேர் என மாணவர்கள் அமையலாம். அல்லது ஏதேனும் இரு வகுப்புகளின் மாணவர்கள் மட்டும் உள்ளவாறு அமையலாம்.
வெவ்வேறு வண்ணங்களில் வினாத்தாட்கள் வழங்கி தேர்வறையில் ஏற்படக்கூடிய சிரமங்களையும், குழப்பங்களையும் நீக்கலாம். வினாத்தாளில் உள்ள வினாக்கள், ஒரு மாணவரின் அனைத்து வகையான கற்றல் கூறுகளையும், அடைவுத் திறன்களையும், பெற்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் மதிப்பீடு செய்வதாக அமைய வேண்டும்.
2 ½ மணி நேரத்தேர்வில் அனைத்துப் பாடங்களுக்கும், இப்போது மேல்நிலைக் கல்வி கணிப்பொறி அறிவியல் தேர்வில் உள்ளவாறு, ஒரு மணிநேரத்திற்கு ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு OMR Coding Sheet இல் விடை எழுதும் வகையிலும், 1 ½ மணி நேரத்திற்கு சிறு, குறு, நெடு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையிலும் தேர்வு அமைக்கலாம்.
தேர்வறையில் நடக்கும் ஒழுங்கீனங்களைத் தவிர்க்கும் வகையில், ஒரு மதிப்பெண் வினாத்தாள் (போட்டித்தேர்வுகளில் A, B, C, D என்று நான்கு வகை வினாத்தாட்கள் உள்ளவாறு) 10 வகையில் வரிசைப்படுத்தப்பட்டதாக வடிவமைக்கலாம். அதிக பட்சம் 12 நாட்களில் தேர்வை முடிக்குமாறு தேர்வுகளின் கால அட்டவணையை உருவாக்க முடியும்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை படித்து முடிக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களும் மூன்று ஆண்டுகள் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு OMR Coding Sheet இல் விடை எழுதி பழக்கப்பட்டுவிடுவதால் தேசிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டித்தேர்வுகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்வர்.

No comments:
Post a Comment