அப்துல் ரகுமான்

🏆 Good Night 🏆

அப்துல் ரகுமானின் வாழ்க்கைப் பயணங்கள் பற்றிய தகவல்கள்

1. அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு - 1937 நவம்பர் 2 

2. கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுபவர் - அப்துல் ரகுமான் 

3. பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர் - அப்துல் ரகுமான் 

4. தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் குறிப்பிடத்தக்கவர் - கவிக்கோ அப்துல் ரகுமான் 

5. ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

6. அப்துல் ரகுமான் பிறந்த ஊர் - மதுரை 

7. அப்துல் ரகுமானின் பெற்றோர் - சையத் அஹமத் - ஜைனத் பேகம்

8. மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று அழைக்கப்படுபவர் - கவிக்கோ அப்துல் ரகுமான் 

9. தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

10. எந்த ஆண்டுக்குப்பின்னர் கவிதை உலகுக்கு வந்த அப்துல் ரகுமான் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்தார் - 1960 ஆம் ஆண்டுக்கு பின்

11. சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது யாருடைய பாணி - அப்துல் ரகுமான்

12. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லு}ரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

13. அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கியவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

14. தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றியவர் - கவிக்கோ அப்துல் ரகுமான் 

15. அப்துல் ரகுமானுக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழன்னை விருது வழங்கிய ஆண்டு - 1989 

16. யாரை வழிகாட்டியாக கொண்டு அப்துல் ரகுமான் புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்தார் - ச.வே.சுப்பிரமணியம் 

17. கவிக்கோ அப்துல் ரகுமான் எந்த பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் - சென்னைப் பல்கலைக்கழகம் 

18. அப்துல் ரகுமானுக்கு குன்றக்குடி அடிகளார் கவியரசர் பாரிவிழா விருது வழங்கிய ஆண்டு - 1986 

19. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர் - ச.வே.சுப்பிரமணியம் 

20. தமிழக அரசு அப்துல் ரகுமானுக்கு எந்த ஆண்டு பாரதிதாசன் விருது மற்றும் கலைமாமணி விருது வழங்கியது - 1989

21. கவிக்கோ அப்துல் ரகுமான் உமறு புலவர் விருது எந்த ஆண்டு பெற்றார் - 2008 

22. கவிக்கோ அப்துல் ரகுமான் கம்பர் விருது பெற்ற ஆண்டு - 2007 

23. கவிக்கோ அப்துல் ரகுமான் அஷரா விருது பெற்ற ஆண்டு - 1992 

24. சிற்பி அறக்கட்டளை விருது அப்துல் ரகுமான் பெற்ற ஆண்டு - 1996 

25. கவிக்கோ அப்துல் ரகுமான் எந்த துறையின் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார் - தமிழ்த்துறை தலைவர்

Good night

No comments:

Post a Comment

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...