MANUAL SR இருக்காது

எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்
'SR (பணிப்பதிவேடு) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்'அமல்படுத்தும் முறை.
அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ..
DSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை
அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....

மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை.
DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:

1) அனைத்து SR யும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

2) SR DISTRICT TREASURY -ல் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக போன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,

3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்

4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்

5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்

6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும். வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..

7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.

8) RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது. மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்

9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்

10) SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்.அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...

11)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...

12)N.O.C
ஆதார்எண், சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..

13)எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்

14) DSR ல் NEXT INCREMENT ,HRA SLAB அனைத்துமிருக்கும்

15)SCAN முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,
அதன்பின் நாம் ஏதேனும் பிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்.

TNPSC Department Exam Changes

துறைத் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள்....!
(G.O.(Ms) No.33, P&AR (M) Department,  Dated: 02.03.2017)

http://cms.tn.gov.in/sites/default/files/go/par_Ms_33_2017.pdf

* தேர்வுகள் இதுவரை விவரிப்புவகை (Descriptive type) கேள்விகளையே கொண்டிருந்தது. இனி 80 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகை (Objective Type) வினாக்களையும், 20 மதிப்பெண்களுக்கு விவரிப்பு வகை (Descriptive type) வினாக்களையும் கொண்டிருக்கும். (சில துறைத் தேர்வுகளுக்கு  இந்த விகிதம்  60:40 / 40:60 / 50:50  ஆகவும் உள்ளது)

* தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40  இலிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (கொள்குறிவகை வினாவில் 36 மதிப்பெண்களும், விவரிப்புவகை வினாவில் 9 மதிப்பெண்களும் பெறவேண்டும்.)

* பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. சமகாலத்திற்கு ஏற்ப தலைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

* கூட்டுறவுத் துறையின் 8  தாள்கள் 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளன. அதாவது தாள்-1 தாள்-2 என்றிருந்த தாள்கள் ஒன்றாக்கப்பட்டு உள்ளன.

* அனைத்து தேர்வுகளுக்கு ஒரே மாதிரியாக நேரம் 02 மணி 30 நிமிடம் என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* விவரிப்பு வகை தேர்வுகளில் சிலவற்றுக்கு மட்டும் நிர்ணயிக்கப்படட புத்தகங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும். கொள்குறிவினாவிற்கு புத்தகம் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

* தேர்வுக் கட்டணம்  தாள் ஒன்றுக்கு ரூ.50  இல் இருந்து  ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

BIO - METRIC

*டிசம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அமல்*

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் நேரத்தை கண்காணிக்க விரல் ரேகை பதிவு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகங்களிலும் இந்த வருகை பதிவு முறை நடைமுறையில் இல்லை.

அரசு ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு காலையில் 10.10 மணிவரை வேலைக்கு வர சலுகையும் உள்ளது மாதம் 2 நாட்கள் தலா 1 மணி நேரம் ‘பெர்மி‌ஷன்’ கொடுக்கப்படுகிறது. காலம் தாழ்த்தி வந்தால் பெர்மி‌ஷனில் கழித்துக் கொள்ளலாம். அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும்.

ஆசிரியர்களை பொறுத்த வரை காலை 9.20 மணி முதல் 4.10 மணிவரை பணி நேரம் உண்டு. ஆனால் சில ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தினசரி நேரம் கடந்து வருபவர்கள் மீது பள்ளி கல்வித்துறை சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனாலும் இன்னும் ‘லெட்ஜரில்’ கையெழுத்திடும் முறைதான் செயல்பாட்டில் உள்ளது.

இப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேடு, ஊதியம் சர்வீஸ் பைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைபடுத்த முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளது.

இதை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பாளராக விப்ரோ நிறுவனம் உள்ளது. டிஜிட்டல் மயம் பற்றி உயர் அதிகாரி கூறியதாவது:-

அரசின் வரவு- செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வருகிறது.

இதில் டிஜிட்டல் கையொப்பம், விரல் ரேகை பதிவு மூலம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாய மாக்கப்படுகிறது.

இதில் விரல் ரேகை வருகைப்பதிவு டிசம்பர் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அமலாகிறது. தமிழகம் முழுவதும ஒரே சமயத்தில் நடைமுறைபடுத்துவது சற்று சிரமம் ஆனாலும் படிப் படியாக அனைத்து அலுவலகங்களுக்கும் இதை கொண்டு வந்து செயல்படுத்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பு நிகழ்வுகள் + தமிழ் + பொது அறிவு

தமிழகத்தில் 100%  சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள  "வடவானூர்" எந்த மாவட்டத்தில் உள்ளது?

 தஞ்சாவூர்
 காஞ்சிபுரம்
 விழுப்புரம் ✔
 கடலூர்

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள கழுவெளி பறவைகள் சரணாலயம் எந்த மாவடடத்தில் உள்ளது?

 விழுப்புரம் ✔
 கடலூர்
 காஞ்சிபுரம்
 நாகப்பட்டினம்

தமிழக அரசு சார்பில் கொண்டாடும் "தமிழ் கவிஞர் நாள்" (ஏப்ரல்-29)  எந்த கவிஞரின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது?

 பாரதியார்
 கண்ணதாசன்
 வண்ணநிலவன்
 பாரதிதாசன் ✔

இந்தியாவில் "நகர்ப்புற வறுமை ஒழிப்பில்" முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

 கேரளா
 கர்நாடகா
 ஆந்திரா
 தமிழ்நாடு ✔

வங்க பந்து "ஷேக் முஜிபூர் ரஹ்மானை" கௌரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள எந்தச்  சாலைக்கு  அவர் பெயர்  வைக்கப்பட்டது?

 RAJIV STREET
 PANAGAL STREET
 PARKAR STREET
 PARK STREET ✔

தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு?

 ரூ.1.5 லட்சம்
 ரூ.2.5 லட்சம் ✔
 ரூ.3.5 லட்சம்
 ரூ.3.0 லட்சம்

ஐ.நா. சபையின் "இளம் அமைதித் தூதர்" “மலாலா யூசப்சாய்" அமைதிக்கான நோபல் பரிசை எந்த ஆண்டு பெற்றார்?

 2014 ✔
 2015
 2012
 2013

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.  அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

 ராகவன் சந்திரசேகர்
 ராஜீவ் குமார் சந்தர் ✔
 அலோக் குமார்
 கோபிநாத் அச்சங்குளகரே

2017 மிஸ் டீன் (15 முதல் 19 வயது) யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற இந்திய பெண் யார்?

 நந்திதா கவுர்
 நிர்மலா சிருஷ்டி
 சிருஷ்டி கவுர் ✔
 கவுரி நந்தா

உலக சுற்றுலா மற்றும் பயண பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை?

 10
 20
 30
 40 ✔

NITI Aayog-அமைப்பின் "ஐந்து நிரந்தர உறுப்பினர்கள்" யாரால் நியமிக்கப்படுகிறார்கள்?

 பிரதமர் ✔
 குடியரசு தலைவர்
 தலைமை நீதிபதி
 நிதி அமைச்சர்

இந்தியாவில் தற்போதைய நிலையில் (ஜூன் 2017) எத்தனை நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது?

 06
 07 ✔
 08
 09

இந்தியாவின்  முதல் ஹெலிகாப்டர் நிலையம் (HELIPORT) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?

 பெங்களூரு
 கொல்கத்தா
 மும்பை
 டெல்லி✔

இந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

 கேரளா
 டெல்லி
 தமிழ்நாடு ✔
 மகாராஷ்டிரா

இந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும், துறைமுகங்களை விரிவுபடுத்தும் திட்டம் எது?  

 வித்யாமாலா
 ஆரமாலா
 வங்கமாலா
 சாகர்மாலா ✔

2017-ம் ஆண்டுக்கான சிறந்த  விமானப்படை தளத்துக்கான குடியரசுத் தலைவர் விருது  பெற்ற விமானப்படை தளம் எது?

 புனே விமானப்படை தளம்
 தாம்பரம் விமானப்படை தளம் ✔
 அரக்கோணம் விமானப்படை தளம்
 கொச்சி விமானப்படை தளம்

"சாகர்மாலா" திட்டத்தின் கீழ்  தமிழகத்தில்  எந்த துறைமுகத்தில் கப்பல் தளம் அமைக்கப்படவுள்ளது?

 நாகப்பட்டினம்
 கொற்கை
 கடலூர் ✔
 இனயம்

தமிழகத்தில்  குடிமராமத்துப் பணிகள் எந்த இரு மாவட்டங்களைத் தவிர்த்து பிற 30 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது?

 சென்னை, கன்னியாகுமரி
 சென்னை, திருவள்ளூர்
 திருப்பூர், நீலகிரி
 சென்னை, நீலகிரி ✔

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு  புதிதாக பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது?

 வானூர் கழுவெளி ✔
 சேனூர் கழுவெளி
 மானூர் கழுவெளி
 ஆரூர் கழுவெளி


 1.7 வது BRICS சுகாதார மந்திரிகள் கூட்டம் எங்கு நடைபெற்றது?

A) இந்தியா

B) பிரேசில்

C) ரஷ்யா

D) சீனா✅



2.ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற நாடு ?

A) பாகிஸ்தான்

B) சீனா

C) இந்தியா✅

D) தாய்லாந்து



3.ஆசிய தடகள சாம்பியன்ஷிப்(2017) போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தி செல்பவர்?

A) டின்டு லுகா✅

B) ஜிது ராய்

C) தீபா கர்மகர்

D) சரபாணி நந்தா


4.3 வது விளையாட்டுக்கான சர்வதேச மாநாடு "CII ஸ்கோர் கார்ட் 2017" எங்கு நடைபெற்றது ?

A) புது தில்லி✅

B) மும்பை

C) சென்னை

D) போபால்


5.சைபர் பாதுகாப்பில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது ?

A) 32 வது

B) 63 வது

C) 43 வது

D) 23 வது✅


6.காரக்பூர் ஐஐடியின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) டிபணிவிடா ராய் சவுத்ரி

B) ஆர்.பீ. சஞ்சீவ் கோயங்கா✅

C) N பாலகிருஷ்ணன்

D) ஜெய் பால் மிட்டல்


7.ஜிக்கியசா(Jigyasa) திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

A) மும்பை

B) டெல்லி✅

C) சென்னை

D) லக்னோ



8.தலித் மாணவர்களுக்கு மட்டும் தனியான பல்கலைக்கழகம் எங்கு தொடங்கவுள்ளனர்?

A) விஜயவாடா

B) கொச்சி

C) ஹைதராபாத்✅

D) லக்னோ



9.இந்தியா மற்றும் எந்த நாடுகளை உள்ளடக்கிய மலபார் கடற்படைப் பயிற்சி நடைபெற்றது.

A) பிரான்ஸ் மற்றும் ஜப்பான்

B) அமெரிக்கா மற்றும் ஜெர்மனி

C) அமெரிக்கா மற்றும் ஜப்பான்✅

D) ஜப்பான் மற்றும் ரஷ்யா


10.மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட் நடைமுறையை அறிமுகப்படுத்திய நாடு ?

A) தாய்லாந்து

B) மியான்மார்

C) ஆப்கானிஸ்தான்

D) பாகிஸ்தான்✅


“1. அறிவு அற்றம் காக்கும் அறிவு” - திருவள்ளுவர்
“2. பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்.
3“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்” - திருவள்ளுவர்.
4. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
5. தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
6. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
7. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - திருக்குறள்
8. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - திருவாசகம்
“9. புல்லாகிப் பூடாய்” - திருவாசகம்
“10. மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” - திருவாசகம்
“11. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” - திருமூலர்
“12. வறிது நிலைஇய காயமும்”- புறநானூறு
“13. வலவன் ஏவா வானூர்தி” - புறநானூறு
“14. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” - பதிற்றுப்பத்து
“15. அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” - பெருங்கதை
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்
“17. செம்புலப் பெயல் நீர்போல” - குறுந்தொகை
“18. அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” - புறநானூற்று
“19. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” - ஒளவையார்
“20. ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - கம்பர்
“21. உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”:
---------------------
21."திருக்குறளுக்கு" உரை எழுதியவர்-?
பரிமேலழகர்.
22."பதிற்றுப்பற்றுக்கு" உரை எழுதியவர்?
சு.துரைசாமி பிள்ளை.
23."சிலப்பதிகாரத்திற்கு" உரை எழுதியவர்?
24."பரிபாடலுக்கு "உரை எழுதியவர்?
பரிமேலழகர்
25."கலித்தொகைக்கு" உரை எழுதியவர்?
உச்சி மேற் புலவர் நச்சினார்க்கினியர்.
26."நாலடியாராக்கு" உரை எழுதியவர்?
பதுமனர்,தருமரும்.
27."நன்னுல் "உரை எழுதியவர்?
மயிலை நாதர்.
28."சீவக சிந்தாமணி" நூலுக்கு உரை எழுதியவர்?
நச்சினார் கினியர்.
29.தமிழ்மொழியில் முதல் கள ஆய்வு நூல் எது?
பெரியபுராணம்.
30.முதல் சித்தர்?
திருமூலர்.
31.முதல் சித்த நூல் எது?
திருமந்திரம்.
32."மக்கள் இலக்கியம்" இலக்கியம் என்று அழைக்கப்பட்ட நூல் எது?
சங்க இலக்கியம்.
33.சித்தர்களின் தலைவன்?
அகத்தியர்.
34."திருவிளையாடர் புராணம் "நூலுக்கு உரை எழுதியவர்?
நா.மு.வேங்கடசாமி நாடார்.
35".சைவர்களின் இதிகாசம்"-என்று அழைக்கப்பட்ட நூல்?
கந்தபுராணம்
36.ஆழ்வார்கள்12பேர்கள்--வைணவ சமயத்தை சேர்ந்தவர்கள்.
நாயன்மார்கள்63பேர்கள்--சைவசமயத்தை சேர்ந்தவர்கள்.
37.நாலாயிரத்திவ்விய பிரபந்தம்(நாதமுனி தொகுத்தார்)நூல்க்கு உரை எழுதியவர்?
பெரிய வாச்சான்பிள்ளை.
38.சைவசமயத்தில் சிறந்தவர்-மாணிக்கவாசகர்,
வைணத்தில் சிறந்தவர்-நம்மாழ்வார்.
39.நான்முகன்-பிரமன்.
40.ராமனுக்கு தாலாட்டு பாடியவர்?
குலசேகர ஆழ்வார்.
கண்ணனுக்கு தாலாட்டு பாடியவர்?
பெரியாழ்வார்.
41. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
ரா.பி.சேதுப்பிள்ளை
#42. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1955
43. தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?
1967
44. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
1968
45. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?
1996
46 இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?
12,500
47 முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
48. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
49. திராவிடம் என்னும் சொல்லைமுதன்முதலில் உருவாக்கியவர்யார் - குமரிலபட்டர்
50. வேதாரண்ய புராணம் என்றநூலை எழுதியவர் யார் -பரஞ்சோதிமுனிவர்
51. புலவர் புகழேந்தியைஆதரித்தவர் - சந்திரன்சுவர்க்கி
52. கவிவேந்தர் எனஅழைக்கப்படுபவர் - ஆலந்தூர்மோகனரங்கன்
53. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் -சடையப்ப வள்ளல்
56. கம்பர் யாருடைய அவையில்அவைப்புலவராக இருந்தார் -குலோத்துங்கச்சோழன்
57. திருக்குறளுக்கு பதின்மர்எழுதிய உரையில் சிறந்தஉரையாக யாருடைய உரைகருதப்படுகிறது - பரிமேலழகர்
58. இந்திய நாட்டை மொழிகளின்காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர்யார் - அகத்தியலிங்கம்
59. தெலுங்கு கங்கை எனச்சிறப்பிக்கப்படும் நதி – கிருஷ்ணா
60. இலக்கியம் என்ற பெயரில்இதழ் நடத்தியவர் யார் - சுரதா



#ஆண்டு_இலக்கு

1) 2018 க்குள் கங்கை நதி தூய்மை

2) 2019 க்குள் இந்தியா -  வங்காள தேசம் எல்லை வேலியிடப்படும்

3) 2025 ல் INS விஷால் போர்க்கப்பல் சேவைக்கு வரும் (உள்நாட்டில் தயாரிப்பு)

4) 2020 க்குள் இலங்கையில் புகையிலை பயிரிடுவது நிறுத்தம்

5) தூய்மை இந்தியா - 2019

6) திறன்மிகு இந்தியா - 2022


குரூப் 2ஏ 🔨🔨🔨

பொது அறிவு வினா விடைகள் - பொருளியல் :

1. எதன் மூலம் இந்தியா அதிக வெளிநாட்டு செலாவணியை பெறுகிறது? - தேநீர்

2. நிதி ஆண்டு என்பது? - ஏப்ரல் முதல் மார்ச் வரை

3. பசுமைப்புரட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 1966

4. இந்தியாவின் 24-வது RBI கவர்னர் யார்? - உர்ஜித் பட்டேல்

5. இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆற்றல் எது? - நிலக்கரி

6. னுச. ராஜா செல்லையா குழு எதனுடன் தொடர்புடையது? - வரி சீர்திருத்தம்

7. மனித முன்னேற்ற குறியீடு எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? - 1990

8. ஐந்தாண்டு திட்டத்திற்கு கடைசியாக அனுமதி தருபவர் யார்? - தேசிய வளர்ச்சிக் குழு

9. பருவகால வேலையின்மை எத்துறையின் இயல்பு? - வேளாண்மை.

10. இந்திய நாணயங்கள் அச்சிடப்படும் இடங்கள் எவை? - மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத்

11. இந்தியாவில் இதுவரை எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளது? - 20

12. கம்பெனி சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? - 1956

13. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பி - பி.சி. மஹல்லனோபிஸ்

14. NABARD எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? - 1982

15. இந்திய பொருளாதாரம் என்பது? - கலப்பு பொருளாதாரம்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி?

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை -*
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய
உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.
பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)
தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு

(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)

(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)
பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)
முன் ஊதிய உயர்வு

(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.
(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)

(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.

(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)
(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)
(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)
பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு
ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)
குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்
கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது
தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))
தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்
ஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With 
Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.
Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.
இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.
ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்
ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)
பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு

(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனை சாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)
(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)
தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்
முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.
ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு
1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)

ஊதிய உயர்வுக்கு சேரும் காலம் –
பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல் பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)
ஊதிய உயர்வுக்கு சேராத காலம்
மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)

அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்
Home
View web version
Powered by Blogger.

உலகின் முதல் மொழி தமிழ்!

மொழி அறிவு இன சிறப்பு !!!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்றவற்றின்  நூல்கள் உள்ளன.

பகிர்வுக்கு தயங்க வேண்டாம்

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...