*தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் வரலாறு*

*அரியலூர் மாவட்டம்* 2001 ஜனவரியில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட அரியலூர், 2002-ல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் நவம்பர் 23, 2007-ல் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் 3 முக்கிய நகரங்களாக அரியலூர், உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. இவற்றில்
நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் நிலக்கரி படிமங்களாக கிடைக்கிறது.

*இராமநாதபுரம் மாவட்டம்* பாம்பன் பாலத்துக்காக புகழ்பெற்ற இராமேஸ்வரம் நகரம் இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அமைந்திருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வடக்கே சிவகங்கை மாவட்டமும், மேற்கே மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக இராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன

*ஈரோடு மாவட்டம்* பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை எனப்பெயர்பெற்று பின்னர் அதுவே ஈரோடு ஆனது. ஈரோடு மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, 1979-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது.

*கடலூர் மாவட்டம்* உப்பனாறு, பரவனாறு போன்ற நதிகள் இங்கு கடலோடு கூடுவதால் கூடலூர் என்று பெயர்பெற்று அதுவே பின்னர் 'கடலின் நகரம்' என்ற பொருளில் கடலூர் என்று அழைக்கப்படலாயிற்று. புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் காடுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடலூர் மாவட்டத்தில் தான் அமைந்திருக்கின்றன.

*கரூர் மாவட்டம்* 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கரூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக கரூர் மற்றும் குளித்தலை நகரங்கள் அறியப்படுகின்றன.

*கன்னியாகுமரி மாவட்டம்* குமரித் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மார்சல் நேசமணியின் தலைமையில் நடந்த விடுதலை போராட்டத்தின் வெற்றியாக நவம்பர், 1956-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட 4 நகராட்சிகளை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்

*காஞ்சிபுரம் மாவட்டம்* அறிஞர் அண்ணா பிறந்த இடம், பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகர், பட்டுப்புடவை என்று பற்பல விஷயங்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் புகழோடு அறியப்படுகிறது. இந்த மாவட்டத்தில் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட ஆலயங்கள் உள்ளன..

*கிருஷ்ணகிரி மாவட்டம்* தமிழ்நாட்டின் 30-வது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக ஓசூர் நகரம் அறியப்படுகிறது.

*கோயம்புத்தூர் மாவட்டம்* பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் சிறுவாணி ஆற்றின் நீர் உலகிலேயே 2-வது சுவையான நீராக கருதப்படுகிறது.

*சிவகங்கை மாவட்டம்* சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது. இவற்றில் காரைக்குடி நகரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.

*சென்னை மாவட்டம்* தமிழகத்தின் தலைநகரம் சென்னையை மையமாக கொண்டு அமையப்பெற்ற சென்னை மாவட்டத்துக்கு என்று தனியாக தலைநகரம் எதுவும் கிடையாது. சென்னை மாவட்டம் மெரினா கடற்கரை, பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்றவருக்காக புகழ்பெற்றது.

*சேலம் மாவட்டம்* நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேலத்திலிருந்து பிரிக்கப்படுவதற்கு முன் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் மாவட்டமே அறியப்பட்டு வந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கிவரும் மேட்டூர் அணை, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன..

*தஞ்சாவூர் மாவட்டம்* தமிழ்நாட்டின் அரிசிக்கின்னம் என்று அறியப்படும் தஞ்சாவூர் மாவட்டம் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திரப் புகழ் வாய்ந்த மாவட்டம். உலகப்புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றுக்காக தஞ்சை மாவட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

*தர்மபுரி மாவட்டம்* கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் தர்மபுரி
மாவட்டம் கோயில்களுக்காகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இவற்றில் சென்றாய பெருமாள் கோயில், ஒகேனக்கல் அருவி ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.

*திண்டுக்கல் மாவட்டம்* மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1985-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இதுதவிர முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்.

*திருச்சிராப்பள்ளி மாவட்டம்* திருச்சி மாவட்டம் வடக்கில் சேலம் மாவட்டத்தையும், கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தையும், தெற்கில் மதுரை மாவட்டத்தையும், மேற்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான அணையாக கருதப்படும் கல்லணை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.

*திருநெல்வேலி மாவட்டம்* 1790-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ல் திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. தாமிரபரணி ஆறு பாயும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் ஆலயம், அகஸ்தியர் அருவி ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

*திருப்பூர் மாவட்டம்* திருப்பூர் மாவட்டம். 2008-ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதன் பிறகு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.

*திருவண்ணாமலை மாவட்டம்* 1989-ஆண்டு வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை சம்புவரயர் மாவட்டம் மற்றும் வ. டஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் 1996-ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.

*திருவள்ளூர் மாவட்டம்* 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்தபோது திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

*திருவாரூர் மாவட்டம்* திருவாரூர் மாவட்டம் சோழர்களால் 1-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தியாகராஜஸ்வாமி திருக்கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது.

*தூத்துக்குடி மாவட்டம்* துறைமுக நகரம் என்றும், முத்துக்களின் நகரம் என்றும் சிறப்பித்து கூறப்படும் தூத்துக்குடி நகரத்தை தலைநகரமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டம் செயல்பட்டு வருகிறது.

*தேனி மாவட்டம்* மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜூலை 25, 1996-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மேகமலை, சுருளி நீர்வீழ்ச்சி, போடி மெட்டு ஆகியவை அறியப்படுகின்றன.

*நாகப்பட்டினம் மாவட்டம்* 1991-ஆம் ஆண்டு, அக்டோபர் 18-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம் மிகுந்த மாவட்டம் என்று அறியப்படுகிறது.


     *மு.இராஜேஷ்*
        🏮 *நட்பு வட்டம்*🏮

*நாமக்கல் மாவட்டம்* 1997-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில், கொல்லிமலை ஆகியவை அறியப்படுகின்றன.

*நீலகிரி மாவட்டம்* மலைகளின் ராணி ஊட்டியை தலைநகரமாக கொண்டு நீலகிரி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. ஊட்டியை தவிர குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

*புதுக்கோட்டை மாவட்டம்* ஜனவரி 14, 1974-ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக சித்தன்னவாசல், விராலிமலை ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.

*பெரம்பலூர் மாவட்டம்* 1995-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

*மதுரை மாவட்டம்* திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. மதுரை மாவட்டம் மீனாட்சியம்மன் கோயில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மஹால், பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம்.

*விருதுநகர் மாவட்டம்* தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், வடமேற்கில் தேனி மாவட்டமும் விருதுநகர் மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களாக சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியவை அறியப்படுகின்றன.

*விழுப்புரம் மாவட்டம்* 1993-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வரலாற்று புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.

*வேலூர் மாவட்டம்* 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே வேலூர் இருந்தது. பின்னர் 1989-ல் வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996-ல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்



திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு.....

நேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.

  மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார்  அவர்களும் கலந்து கொண்டார்.

விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி  11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது.

அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் " நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்" என்றார்.

உடனே நம் மதிப்புமிகு ஆட்சியர் " வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்" என கூறி  யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், " இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும்.
 நானும்  உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்" என்றார்.

இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
நமது மாவட்ட ஆட்சியர் கல்விக்காக  பல பணியாற்றி வருகிறார்.
 அவருடன் இணைந்து நம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் மாவட்ட கல்வி முன்னேற பாடுபட்டு வருகிறார்.

நம் மாவட்ட ஆட்சியர் அளித்து வரும் ஊக்கத்தின் மூலம் நம் மாவட்டம் இந்த ஆண்டில் மாபெரும் வெற்றி பெறும்.

மேற்காண் இந்த நிகழ்வு மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்தது.

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் ......
வாழ்த்துக்கள்.....

_*தோல்வி என்றால்...என்ன ?*_


👏👏👏👏👏👏👏👏👏👏

*தோல்வி*
என்றால் நீங்கள் தோற்றவர் என்று
பொருள் அல்ல. நீங்கள் இன்னும்
வெற்றி பெறவில்லை என்று
பொருள்.

*தோல்வி*
என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல. சில
பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள்.

*தோல்வி*
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை.
முயன்று பார்க்கும் துணிவு
உங்களிடம் உள்ளது என்று
பொருள்.

*தோல்வி*
என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை.
மீண்டும் ஆரம்பிக்க ஒரு
வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள்.

*தோல்வி*
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்.

*தோல்வி*
என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள்
அல்ல அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்.

*தோல்வி*
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை. உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று பொருள்..

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!*

வாழ்க வளமுடன்...

MANUAL SR இருக்காது

எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்
'SR (பணிப்பதிவேடு) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்'அமல்படுத்தும் முறை.
அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ..
DSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை
அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....

மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை.
DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:

1) அனைத்து SR யும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

2) SR DISTRICT TREASURY -ல் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக போன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,

3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்

4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்

5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்

6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும். வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..

7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.

8) RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது. மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்

9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்

10) SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்.அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...

11)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...

12)N.O.C
ஆதார்எண், சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..

13)எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்

14) DSR ல் NEXT INCREMENT ,HRA SLAB அனைத்துமிருக்கும்

15)SCAN முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,
அதன்பின் நாம் ஏதேனும் பிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்.

TNPSC Department Exam Changes

துறைத் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள்....!
(G.O.(Ms) No.33, P&AR (M) Department,  Dated: 02.03.2017)

http://cms.tn.gov.in/sites/default/files/go/par_Ms_33_2017.pdf

* தேர்வுகள் இதுவரை விவரிப்புவகை (Descriptive type) கேள்விகளையே கொண்டிருந்தது. இனி 80 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகை (Objective Type) வினாக்களையும், 20 மதிப்பெண்களுக்கு விவரிப்பு வகை (Descriptive type) வினாக்களையும் கொண்டிருக்கும். (சில துறைத் தேர்வுகளுக்கு  இந்த விகிதம்  60:40 / 40:60 / 50:50  ஆகவும் உள்ளது)

* தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40  இலிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (கொள்குறிவகை வினாவில் 36 மதிப்பெண்களும், விவரிப்புவகை வினாவில் 9 மதிப்பெண்களும் பெறவேண்டும்.)

* பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. சமகாலத்திற்கு ஏற்ப தலைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

* கூட்டுறவுத் துறையின் 8  தாள்கள் 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளன. அதாவது தாள்-1 தாள்-2 என்றிருந்த தாள்கள் ஒன்றாக்கப்பட்டு உள்ளன.

* அனைத்து தேர்வுகளுக்கு ஒரே மாதிரியாக நேரம் 02 மணி 30 நிமிடம் என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* விவரிப்பு வகை தேர்வுகளில் சிலவற்றுக்கு மட்டும் நிர்ணயிக்கப்படட புத்தகங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும். கொள்குறிவினாவிற்கு புத்தகம் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

* தேர்வுக் கட்டணம்  தாள் ஒன்றுக்கு ரூ.50  இல் இருந்து  ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

BIO - METRIC

*டிசம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அமல்*

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் நேரத்தை கண்காணிக்க விரல் ரேகை பதிவு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகங்களிலும் இந்த வருகை பதிவு முறை நடைமுறையில் இல்லை.

அரசு ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு காலையில் 10.10 மணிவரை வேலைக்கு வர சலுகையும் உள்ளது மாதம் 2 நாட்கள் தலா 1 மணி நேரம் ‘பெர்மி‌ஷன்’ கொடுக்கப்படுகிறது. காலம் தாழ்த்தி வந்தால் பெர்மி‌ஷனில் கழித்துக் கொள்ளலாம். அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும்.

ஆசிரியர்களை பொறுத்த வரை காலை 9.20 மணி முதல் 4.10 மணிவரை பணி நேரம் உண்டு. ஆனால் சில ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தினசரி நேரம் கடந்து வருபவர்கள் மீது பள்ளி கல்வித்துறை சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனாலும் இன்னும் ‘லெட்ஜரில்’ கையெழுத்திடும் முறைதான் செயல்பாட்டில் உள்ளது.

இப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேடு, ஊதியம் சர்வீஸ் பைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைபடுத்த முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளது.

இதை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பாளராக விப்ரோ நிறுவனம் உள்ளது. டிஜிட்டல் மயம் பற்றி உயர் அதிகாரி கூறியதாவது:-

அரசின் வரவு- செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வருகிறது.

இதில் டிஜிட்டல் கையொப்பம், விரல் ரேகை பதிவு மூலம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாய மாக்கப்படுகிறது.

இதில் விரல் ரேகை வருகைப்பதிவு டிசம்பர் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அமலாகிறது. தமிழகம் முழுவதும ஒரே சமயத்தில் நடைமுறைபடுத்துவது சற்று சிரமம் ஆனாலும் படிப் படியாக அனைத்து அலுவலகங்களுக்கும் இதை கொண்டு வந்து செயல்படுத்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பு நிகழ்வுகள் + தமிழ் + பொது அறிவு

தமிழகத்தில் 100%  சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள  "வடவானூர்" எந்த மாவட்டத்தில் உள்ளது?

 தஞ்சாவூர்
 காஞ்சிபுரம்
 விழுப்புரம் ✔
 கடலூர்

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள கழுவெளி பறவைகள் சரணாலயம் எந்த மாவடடத்தில் உள்ளது?

 விழுப்புரம் ✔
 கடலூர்
 காஞ்சிபுரம்
 நாகப்பட்டினம்

தமிழக அரசு சார்பில் கொண்டாடும் "தமிழ் கவிஞர் நாள்" (ஏப்ரல்-29)  எந்த கவிஞரின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது?

 பாரதியார்
 கண்ணதாசன்
 வண்ணநிலவன்
 பாரதிதாசன் ✔

இந்தியாவில் "நகர்ப்புற வறுமை ஒழிப்பில்" முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

 கேரளா
 கர்நாடகா
 ஆந்திரா
 தமிழ்நாடு ✔

வங்க பந்து "ஷேக் முஜிபூர் ரஹ்மானை" கௌரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள எந்தச்  சாலைக்கு  அவர் பெயர்  வைக்கப்பட்டது?

 RAJIV STREET
 PANAGAL STREET
 PARKAR STREET
 PARK STREET ✔

தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் எவ்வளவு?

 ரூ.1.5 லட்சம்
 ரூ.2.5 லட்சம் ✔
 ரூ.3.5 லட்சம்
 ரூ.3.0 லட்சம்

ஐ.நா. சபையின் "இளம் அமைதித் தூதர்" “மலாலா யூசப்சாய்" அமைதிக்கான நோபல் பரிசை எந்த ஆண்டு பெற்றார்?

 2014 ✔
 2015
 2012
 2013

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.  அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

 ராகவன் சந்திரசேகர்
 ராஜீவ் குமார் சந்தர் ✔
 அலோக் குமார்
 கோபிநாத் அச்சங்குளகரே

2017 மிஸ் டீன் (15 முதல் 19 வயது) யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற இந்திய பெண் யார்?

 நந்திதா கவுர்
 நிர்மலா சிருஷ்டி
 சிருஷ்டி கவுர் ✔
 கவுரி நந்தா

உலக சுற்றுலா மற்றும் பயண பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை?

 10
 20
 30
 40 ✔

NITI Aayog-அமைப்பின் "ஐந்து நிரந்தர உறுப்பினர்கள்" யாரால் நியமிக்கப்படுகிறார்கள்?

 பிரதமர் ✔
 குடியரசு தலைவர்
 தலைமை நீதிபதி
 நிதி அமைச்சர்

இந்தியாவில் தற்போதைய நிலையில் (ஜூன் 2017) எத்தனை நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது?

 06
 07 ✔
 08
 09

இந்தியாவின்  முதல் ஹெலிகாப்டர் நிலையம் (HELIPORT) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?

 பெங்களூரு
 கொல்கத்தா
 மும்பை
 டெல்லி✔

இந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

 கேரளா
 டெல்லி
 தமிழ்நாடு ✔
 மகாராஷ்டிரா

இந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும், துறைமுகங்களை விரிவுபடுத்தும் திட்டம் எது?  

 வித்யாமாலா
 ஆரமாலா
 வங்கமாலா
 சாகர்மாலா ✔

2017-ம் ஆண்டுக்கான சிறந்த  விமானப்படை தளத்துக்கான குடியரசுத் தலைவர் விருது  பெற்ற விமானப்படை தளம் எது?

 புனே விமானப்படை தளம்
 தாம்பரம் விமானப்படை தளம் ✔
 அரக்கோணம் விமானப்படை தளம்
 கொச்சி விமானப்படை தளம்

"சாகர்மாலா" திட்டத்தின் கீழ்  தமிழகத்தில்  எந்த துறைமுகத்தில் கப்பல் தளம் அமைக்கப்படவுள்ளது?

 நாகப்பட்டினம்
 கொற்கை
 கடலூர் ✔
 இனயம்

தமிழகத்தில்  குடிமராமத்துப் பணிகள் எந்த இரு மாவட்டங்களைத் தவிர்த்து பிற 30 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது?

 சென்னை, கன்னியாகுமரி
 சென்னை, திருவள்ளூர்
 திருப்பூர், நீலகிரி
 சென்னை, நீலகிரி ✔

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு  புதிதாக பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது?

 வானூர் கழுவெளி ✔
 சேனூர் கழுவெளி
 மானூர் கழுவெளி
 ஆரூர் கழுவெளி


 1.7 வது BRICS சுகாதார மந்திரிகள் கூட்டம் எங்கு நடைபெற்றது?

A) இந்தியா

B) பிரேசில்

C) ரஷ்யா

D) சீனா✅



2.ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற நாடு ?

A) பாகிஸ்தான்

B) சீனா

C) இந்தியா✅

D) தாய்லாந்து



3.ஆசிய தடகள சாம்பியன்ஷிப்(2017) போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தி செல்பவர்?

A) டின்டு லுகா✅

B) ஜிது ராய்

C) தீபா கர்மகர்

D) சரபாணி நந்தா


4.3 வது விளையாட்டுக்கான சர்வதேச மாநாடு "CII ஸ்கோர் கார்ட் 2017" எங்கு நடைபெற்றது ?

A) புது தில்லி✅

B) மும்பை

C) சென்னை

D) போபால்


5.சைபர் பாதுகாப்பில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது ?

A) 32 வது

B) 63 வது

C) 43 வது

D) 23 வது✅


6.காரக்பூர் ஐஐடியின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

A) டிபணிவிடா ராய் சவுத்ரி

B) ஆர்.பீ. சஞ்சீவ் கோயங்கா✅

C) N பாலகிருஷ்ணன்

D) ஜெய் பால் மிட்டல்


7.ஜிக்கியசா(Jigyasa) திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

A) மும்பை

B) டெல்லி✅

C) சென்னை

D) லக்னோ



8.தலித் மாணவர்களுக்கு மட்டும் தனியான பல்கலைக்கழகம் எங்கு தொடங்கவுள்ளனர்?

A) விஜயவாடா

B) கொச்சி

C) ஹைதராபாத்✅

D) லக்னோ



9.இந்தியா மற்றும் எந்த நாடுகளை உள்ளடக்கிய மலபார் கடற்படைப் பயிற்சி நடைபெற்றது.

A) பிரான்ஸ் மற்றும் ஜப்பான்

B) அமெரிக்கா மற்றும் ஜெர்மனி

C) அமெரிக்கா மற்றும் ஜப்பான்✅

D) ஜப்பான் மற்றும் ரஷ்யா


10.மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட் நடைமுறையை அறிமுகப்படுத்திய நாடு ?

A) தாய்லாந்து

B) மியான்மார்

C) ஆப்கானிஸ்தான்

D) பாகிஸ்தான்✅


“1. அறிவு அற்றம் காக்கும் அறிவு” - திருவள்ளுவர்
“2. பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்.
3“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்” - திருவள்ளுவர்.
4. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
5. தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
6. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.
7. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் - திருக்குறள்
8. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - திருவாசகம்
“9. புல்லாகிப் பூடாய்” - திருவாசகம்
“10. மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” - திருவாசகம்
“11. உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” - திருமூலர்
“12. வறிது நிலைஇய காயமும்”- புறநானூறு
“13. வலவன் ஏவா வானூர்தி” - புறநானூறு
“14. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” - பதிற்றுப்பத்து
“15. அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” - பெருங்கதை
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்
“17. செம்புலப் பெயல் நீர்போல” - குறுந்தொகை
“18. அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” - புறநானூற்று
“19. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” - ஒளவையார்
“20. ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - கம்பர்
“21. உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”:
---------------------
21."திருக்குறளுக்கு" உரை எழுதியவர்-?
பரிமேலழகர்.
22."பதிற்றுப்பற்றுக்கு" உரை எழுதியவர்?
சு.துரைசாமி பிள்ளை.
23."சிலப்பதிகாரத்திற்கு" உரை எழுதியவர்?
24."பரிபாடலுக்கு "உரை எழுதியவர்?
பரிமேலழகர்
25."கலித்தொகைக்கு" உரை எழுதியவர்?
உச்சி மேற் புலவர் நச்சினார்க்கினியர்.
26."நாலடியாராக்கு" உரை எழுதியவர்?
பதுமனர்,தருமரும்.
27."நன்னுல் "உரை எழுதியவர்?
மயிலை நாதர்.
28."சீவக சிந்தாமணி" நூலுக்கு உரை எழுதியவர்?
நச்சினார் கினியர்.
29.தமிழ்மொழியில் முதல் கள ஆய்வு நூல் எது?
பெரியபுராணம்.
30.முதல் சித்தர்?
திருமூலர்.
31.முதல் சித்த நூல் எது?
திருமந்திரம்.
32."மக்கள் இலக்கியம்" இலக்கியம் என்று அழைக்கப்பட்ட நூல் எது?
சங்க இலக்கியம்.
33.சித்தர்களின் தலைவன்?
அகத்தியர்.
34."திருவிளையாடர் புராணம் "நூலுக்கு உரை எழுதியவர்?
நா.மு.வேங்கடசாமி நாடார்.
35".சைவர்களின் இதிகாசம்"-என்று அழைக்கப்பட்ட நூல்?
கந்தபுராணம்
36.ஆழ்வார்கள்12பேர்கள்--வைணவ சமயத்தை சேர்ந்தவர்கள்.
நாயன்மார்கள்63பேர்கள்--சைவசமயத்தை சேர்ந்தவர்கள்.
37.நாலாயிரத்திவ்விய பிரபந்தம்(நாதமுனி தொகுத்தார்)நூல்க்கு உரை எழுதியவர்?
பெரிய வாச்சான்பிள்ளை.
38.சைவசமயத்தில் சிறந்தவர்-மாணிக்கவாசகர்,
வைணத்தில் சிறந்தவர்-நம்மாழ்வார்.
39.நான்முகன்-பிரமன்.
40.ராமனுக்கு தாலாட்டு பாடியவர்?
குலசேகர ஆழ்வார்.
கண்ணனுக்கு தாலாட்டு பாடியவர்?
பெரியாழ்வார்.
41. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
ரா.பி.சேதுப்பிள்ளை
#42. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1955
43. தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?
1967
44. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
1968
45. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?
1996
46 இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?
12,500
47 முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
48. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
49. திராவிடம் என்னும் சொல்லைமுதன்முதலில் உருவாக்கியவர்யார் - குமரிலபட்டர்
50. வேதாரண்ய புராணம் என்றநூலை எழுதியவர் யார் -பரஞ்சோதிமுனிவர்
51. புலவர் புகழேந்தியைஆதரித்தவர் - சந்திரன்சுவர்க்கி
52. கவிவேந்தர் எனஅழைக்கப்படுபவர் - ஆலந்தூர்மோகனரங்கன்
53. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் -சடையப்ப வள்ளல்
56. கம்பர் யாருடைய அவையில்அவைப்புலவராக இருந்தார் -குலோத்துங்கச்சோழன்
57. திருக்குறளுக்கு பதின்மர்எழுதிய உரையில் சிறந்தஉரையாக யாருடைய உரைகருதப்படுகிறது - பரிமேலழகர்
58. இந்திய நாட்டை மொழிகளின்காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர்யார் - அகத்தியலிங்கம்
59. தெலுங்கு கங்கை எனச்சிறப்பிக்கப்படும் நதி – கிருஷ்ணா
60. இலக்கியம் என்ற பெயரில்இதழ் நடத்தியவர் யார் - சுரதா



#ஆண்டு_இலக்கு

1) 2018 க்குள் கங்கை நதி தூய்மை

2) 2019 க்குள் இந்தியா -  வங்காள தேசம் எல்லை வேலியிடப்படும்

3) 2025 ல் INS விஷால் போர்க்கப்பல் சேவைக்கு வரும் (உள்நாட்டில் தயாரிப்பு)

4) 2020 க்குள் இலங்கையில் புகையிலை பயிரிடுவது நிறுத்தம்

5) தூய்மை இந்தியா - 2019

6) திறன்மிகு இந்தியா - 2022


குரூப் 2ஏ 🔨🔨🔨

பொது அறிவு வினா விடைகள் - பொருளியல் :

1. எதன் மூலம் இந்தியா அதிக வெளிநாட்டு செலாவணியை பெறுகிறது? - தேநீர்

2. நிதி ஆண்டு என்பது? - ஏப்ரல் முதல் மார்ச் வரை

3. பசுமைப்புரட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 1966

4. இந்தியாவின் 24-வது RBI கவர்னர் யார்? - உர்ஜித் பட்டேல்

5. இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆற்றல் எது? - நிலக்கரி

6. னுச. ராஜா செல்லையா குழு எதனுடன் தொடர்புடையது? - வரி சீர்திருத்தம்

7. மனித முன்னேற்ற குறியீடு எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? - 1990

8. ஐந்தாண்டு திட்டத்திற்கு கடைசியாக அனுமதி தருபவர் யார்? - தேசிய வளர்ச்சிக் குழு

9. பருவகால வேலையின்மை எத்துறையின் இயல்பு? - வேளாண்மை.

10. இந்திய நாணயங்கள் அச்சிடப்படும் இடங்கள் எவை? - மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத்

11. இந்தியாவில் இதுவரை எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளது? - 20

12. கம்பெனி சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? - 1956

13. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பி - பி.சி. மஹல்லனோபிஸ்

14. NABARD எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? - 1982

15. இந்திய பொருளாதாரம் என்பது? - கலப்பு பொருளாதாரம்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி?

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை -*
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய
உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.
பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)
தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு

(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)

(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)
பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)
முன் ஊதிய உயர்வு

(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.
(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)

(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.

(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)
(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)
(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)
பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு
ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)
குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்
கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது
தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))
தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்
ஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With 
Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.
Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.
இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.
ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்
ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)
பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு

(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனை சாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)
(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)
தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்
முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.
ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு
1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)

ஊதிய உயர்வுக்கு சேரும் காலம் –
பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல் பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)
ஊதிய உயர்வுக்கு சேராத காலம்
மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)

அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்
Home
View web version
Powered by Blogger.

உலகின் முதல் மொழி தமிழ்!

மொழி அறிவு இன சிறப்பு !!!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்றவற்றின்  நூல்கள் உள்ளன.

பகிர்வுக்கு தயங்க வேண்டாம்

60 நொடிகளுக்குள் நீர்

தூங்கி எழுந்த 60 நொடிகளுக்குள் நீர் குடிப்பதால் உடலில் உண்டாகும் அற்புதங்கள்!!
ANN News 30 Jun. 2017 09:25


கண்ணு சொக்கும் வரை, சிவக்கும் வரை மொபைல் பயன்படுத்திவிட்டு தான் உறங்க செல்கிறோம். அதே போல உறங்கி எழுந்ததும் மீண்டும் அதே மொபைல் மின்னஞ்சல் பார்ப்பது, முகநூல் நோண்டுவது லைக் இடுவது என நாளை துவக்கிறோம். சிலர் மலம் கழிக்கும் நேரத்திலும் கூட மொபைல் நோண்டுவார்கள்.
ஆனால், இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் 60 நொடிகளுக்குள் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். இது உடலில் நிகழ்த்தும் ஆரோக்கிய அற்புதங்களை அறிந்தால், நீங்கள் இந்த பழக்கத்தை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள்....
ஒரு பெரிய டம்ளரில் 300 மி.லி அளவிலான நீர் நீங்கள் எழுந்தவுடன் பருகுவதால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் 24% அதிகம் ஒன்றரை மணிநேரத்தில் அதிகரிக்கிறது.
உங்கள் சிறுநீர்கள் அற்புதமான அளவில் நச்சுக்களை வடிக்கட்ட ஆரம்பிக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கும். உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கெமிக்கல்களை நீக்க இது உதவும். ஒட்டுமொத உடல் செயல்திறனை ஊக்குவிக்கும்.
தூங்கி எழுந்த 60 நொடிகளில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடன்ல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.
நீங்கள் சரியாக உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும், நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. மேலும், இது நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் வலுவடைய செய்கிறது.
நமது உடலில் படர்ந்து பெரிதாய் இடம் பெற்றிருக்கும் உடல் உறுப்பு சருமம் தான். இதை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நீங்கள் சீரான அளவில் நீர் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதை சரியாக பின்பற்றுவதால் சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஒருநாள் நீங்கள் சரியாக நீர் குடிக்காமல் இருந்தாலும், குடல் இயக்க செயற்பாட்டில் தாக்கங்கள் உண்டாகும். இதனால் மலம் கழிப்பதில் பிரச்சனைகள் உடனாகும். காலை எழுந்ததும் 60 நொடிகளுக்குள் நீர் குடிப்பதால் மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஒரு மாதம் தொடர்ந்து தூங்கி எழுந்த 60 நொடிகளில் தண்ணீர் குடித்து பாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன அற்புதங்கள் உண்டாகின்றன என்பதை நீங்கள் உணர முடியும்!

வாகனத்தின் பதிவு எண்ககள்

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.

எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.

விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:

TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
 TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை

 நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,

செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155

 தயவுசெய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே ;-

Tamilnadu text books

textbookcorp.in இணைய தளத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி புத்தகங்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். ஓரிரு நாட்களில் வீடு தேடி புத்தகங்கள் வந்து விடுகின்றன கூரியரில்.

இதே புத்தகங்கள் தனியார் கடைகளில் மூன்று மடங்கு விலை வைத்து விற்கப்படுகிறது.

பல பள்ளிக்கூடங்களில் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

இந்த இணைய தளத்தில் வாங்கச் சென்றால் மாணவர் விபரங்களை பதியச் சொல்கிறது. அப்போது படிக்கும் பள்ளிக்கூடத்தின் பெயர் கேட்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தின் பெயர் அங்கே இல்லாவிட்டால் எதோ ஒரு பள்ளிக்கூடத்தின் பெயரைத் தேர்வு செய்தாலும் புத்தகம் வந்து விடுகிறது. பிறகு எதற்கு அதெல்லாம் கேட்கிறார்கள்!?

GO.77

*அரசாணை எண்: 77. தமிழக பள்ளிக்கல்வி: நாள்:24.04.2017*

மேற்கண்ட அரசாணை இருந்தால் பதிவிடுங்கள் நண்பர்களே?

பணிபுரியும் பள்ளியிலேயே பி.எட் பயிற்சியை எந்த வித விடுப்பும் எடுக்காமல் எடுப்பதற்கான இயக்குனரின் செயல்முறைகள் தான் அது.

நீதிபதி கிருபாகரன்

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்

*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள்*

1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?

2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?

3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?

4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?

5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?

7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?

8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?

9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?

10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.

11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?

12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?

13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?

14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?

15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?

17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?

19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?

20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

*தற்செயல் விடுப்பு விதிகள் *

🍏 *தற்செயல் விடுப்பு*

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ ,
அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம்,
தேசிய தலைவர் மரணம் , பந்த்,
பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக
11 வது நாள் அரசு விமுறை என
அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309
ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410
ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3
மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )

6. தகுதி காண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண்.
61559 /82 -4 ப.ம.சீ துறை நாள்.
17.1.83)

7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83).

GST

GST விதி - 279A
GST சட்டம் - 101
GST சட்டத்திருத்த மசோதா - 122
GST மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் - ஆக 8,2016
ஜனாதிபதி ஒப்புதல் - 8/9/2016
GST சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் - 12/9/2016
15 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டத்தால் சட்டமாக்கப்பட்டுள்ளது.
GST மசோதாவை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலம் - அசாம்
2வது - பீகார்
3வது - ஜார்கண்ட்
கடைசியாக 16வது - ஒடிசா
GST காரணமாக நீக்கப்பட்ட சரத்து - 268A
சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ள அட்டவணை - 6&7
#பதவி
தலைமை - நிதியமைச்சர் (அருண் ஜெட்லி)
கூடுதல் செயலர் - அருண் கோயல்
GST வரிவிதிப்பு ஒருங்கினைப்பு அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி - பிரகாஷ் குமார்
GST கவுன்சில் முதல் கூட்டத்தொடர் - செப் 22&23
GST மசோதா தொடர்பான குழு - அமித் மிர்சா
ஜிஎஸ்டி மென்பொருள்=இன்போசிஸ்
முதன் முதலில் நாடு=பிரான்ஸ் 1954
ஜிஎஸ்டி மறைமுகவரி உறுப்பினர்கள் அனைத்து மாநில நிதியமைச்சர்
சரக்கு மற்றும் சேவை வரி ( GST ) விளம்பர தூதுவராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

*CRC ஈடு செய்யும் விடுப்பு குறித்து ஒரு விளக்கம்...*

CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு 6 மாதத்திற்குள் (அதாவது 180 நாட்களுக்குள் ) எடுக்கலாம்.

CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே.

*எனவே ,CRC பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெயவிடுப்பானது, 180 நாட்களுக்குள் (அதாவது 6 மாதத்திற்குள்) துய்த்து கொள்ளலாம்

*ஈடுசெய் விடுப்பு அரசாணை எண் 2218 நாள் 14/12/81
எனவே,கடந்த கல்வியாண்டு CRC ஈடுசெய் விடுப்பை தற்போது துய்க்கலாம்.

*அரசாணை எண் 62 நாள் 13/3/15- ல் விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது.அரசாணை எண் 62 என்பது அரசாணை 29 நாள் :12/2/2008 உள்ள மூன்றாம் பத்தியை மாற்றீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை

* 28/01/17 அன்று நடைபெற்ற CRC – க்கு ஈடுசெய் விடுப்பை 26/7/17 க்குள் துய்க்கலாம்

* அதேபோல் 04/03/17 அன்று நடைபெற்ற CRC – க்கு ஈடுசெய் விடுப்பை 01/09/17 க்குள் துய்க்கலாம்.

SSA , RMSA , RAA

இனி வரும் காலங்களில்
SSA Upper Primary Block level பயிற்சிகள்
RMSA உடன் இணைந்தே நடைபெறும் .

 6,7,8,9,10 ஆகிய வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே வளாகத்தில் பயிற்சி

Upper Primary SSA block level training
இனிமேல் RMSA உடன் இணைந்தே நடத்தப் படும் .
RMSA ஆசிரியர்கள் , BRTEs இதில்
சேர்ந்தே  கருத்தாளராக பங்கேற்க வேண்டும்

ஒரே வளாகத்தில் நடத்தப்படும் இப்பயிற்சியில்
 9,10 எடுக்கும் ஆசிரியர்களுக்கு தனி அறையிலும் ,
6,7,8 எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
 ( both middle , HIgh , and. Hr .sec school )
 தனி அறையிலும் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும்
( ஆனால் வளாகம் ஒரே வளாகம் தான் )

11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கு
 தயாராகும் விதத்தில்
RMSA
Rashtriya Avishkar Abhiyaan ( RAA ) என்ற பெயரில் விரிவடைகிறது .

நோக்கம் நல்ல நோக்கம்
NEET போன்ற போட்டித் தேர்வுக்கு
மாணவர்களை தயார் செய்தல்

பயிற்சியில் பாடம் தவிர பிற அரட்டைகள் , நகைச்சுவைக்காக வெளி விஷயம் கூறல் போன்றவை இருக்கக் கூடாது

பாடம் சார்ந்த பயனுள்ள தகவல் மட்டுமே
பகிரப்பட வேண்டும்

சரியாக பாடம் எடுக்காத கருத்தாளர் பற்றிய
புகாரை What's app logo வை scan செய்து
Education secretary க்கு பயிற்சி மையத்தில் இருந்தே பங்கேற்பாளர்கள் புகார் அளிக்கலாம்

Skype மூலம் ONLINE VIDEO CONFERANCE இல் பள்ளிக் கல்வி செயலர் , ஒவ்வொரு மையத்தையும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்வார் .நோக்கம் , தரமான பயிற்சி .

FEED BACK படிவங்களை பயிற்சி மையங்களில் இருந்தே , ONLINE மூலமாக
ஆசிரியர்கள் வழங்க , கூடிய விரைவில்,  வசதிகள் செய்யப்படும்

புதிதாக வரவிருக்கும் பாடத்திட்டத்திற்கு
புத்தகம் எழுதும் பணிக்கும் , ஆசிரியர்களுடன்
BRTE s உம் , சேர்ந்தே கலந்து கொள்ள வேண்ணடும்
*RMSA (SSA combined ) பயிற்சிகள்*
 நடைபெறும் மையங்களில் கருத்தாளர்கள் ( RPs ) முறையாகப் பாடம் மற்றும் பயிற்சி எடுக்கிறாரா ???
பயிற்சி முறையாக ,நன்றாகச் சென்று கொண்டிருக்கிறதா ???

 என்பதை நொடிக்கு நொடி கண்காணித்து
 Education Secretary க்கு அனுப்ப
*MICRO OBSERVER* ஒருவர் நியமிக்கப் பட்டு
அந்தப் பயிற்சி மையத்தின் பயிற்சியின் *current  status -  Education secretary க்கு* *Video conference* ( video call )  மூலம் Micro observer ஆல் தெரிவிக்கப்படும் . இதன் பிரதான நோக்கம் ஒன்றே ஒன்றுதான்
*பயிற்சி தரமான பயிற்சியாக சென்றடைய வேண்டும்*

DSR (Digital SR)

DSR (Digital SR) - டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறைஅனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...
DSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை  அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....


மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை.

DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:


1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.


2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,


3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்


4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்


5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்


6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..


7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.


8) RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது, மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்


9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்


10) SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...


11)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...


12)N.O.C,

ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..


13)எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்


14) DSR ல் NEXT INCREMENT ,HRA SLAB அனைத்துமிருக்கும்


15)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,


அதன்பின் நாம் ஏதேனும் பிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்.

பொது அறிவு - புவியியல்

பொது அறிவு - புவியியல் - கால்நடைகள் மற்றும் மீன் வளர்ப்பு
1. வெண்மை புரட்சி எப்போது தொடங்கப்பட்டது? - 1970

2. வெண்மை புரட்சியின் நோக்கம் என்ன? - பால் வளத்தை பெருக்குவது

3. பண்ணைகள் மூலம் மீன் வளர்க்கும் முறை எதற்கு அதிகம் பயன்படுகிறது? - இறால் மீன்

4. பண்ணைகள் மூலம் மீன் வளர்க்கும் முறையில் முதலிடம் பெறும் மாநிலம் எது? - ஆந்திரா

5. FFDA-ன் விரிவாக்கம் என்ன? -   Fish Farmers Development Agency

6. இந்தியாவின் முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் எவை? - கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், ரால்சௌக், பாராதீப்

7.  Central institute of fisheriy education அமைந்துள்ள இடம் எது? - மும்பை

8. ஆந்த்ராக்ஸ் என்பது என்ன? - கால்நடைகளுக்கு வரும் பாக்டீரியா நோய்

9.  NPFSDஎன்பதன் விரிவாக்கம் என்ன? - national programe for fish seed development

10. கம்பளியைக் கொடுக்கும் ஆட்டு இனம் எது? - அங்கோரா

11. தமிழ்நாட்டின் முதன்மை மீன்பிடித் துறைமுகம் எது? - தூத்துக்குடி

12. நீலப்புரட்சி என்பது என்ன? - மீன் வளத்தை பெருக்குவது

13. இந்திய செம்மறி ஆட்டு இனத்தை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்த இனம் எது? - மெரினோ

14. மத்திய செம்மறி ஆட்டு இனவிருத்தி பண்ணை ஹரியானாவில் நிறுவப்பட்டுள்ள இடம் எது? - ஹிஸ்ஸார்

15. கிர் இன பசுக்கள் காணப்படும் மாநிலங்கள் எவை? - குஜராத், இராஜஸ்தான்

மேலும் தெரிந்து கொள்வோம் :-

இந்தியாவில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள் :-
மத்திய பிரதேசம் - சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, ம்ஹேஸ்வா.
கர்நாடகம் - பாகல்கோட்
ஆந்திரப்பிரதேசம் - கர்னூல் குகைகள், ரேணிகுண்டா
தமிழ்நாடு - வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்

புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் :-
திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம்

அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு

🔵⚪ *தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை -*


ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்ப்போம்.

பொதுவான அரசாணைகள்

(அ) ஆண்டுதோறும் வழக்கம்போல் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. (அடிப்படை விதி 24) (FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

(ஆ) ஒரு ஊழியர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும் கூட ஊதிய உயர்வு வழங்கலாம். (அடிப்படை விதி 24-ன் துணை விதி (8) அரசு கடித.எண் 41533/பணி என்37-9, பணியாளர், நாள் 8.4.1988)

(இ) ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் தேதியில் ஊதிய உயர்வு வழங்கப்படும். FINANCE (PAY CELL) DEPARTMENT G.O. Ms. No. 234, DATED: 1ST JUNE, 2009)

 (ஈ) புதியதாக பணி ஏற்கின்ற அல்லது பதவி உயர்வில் பணி ஏற்கின்ற ஒருவருக்கும் முதல் ஊதிய உயர்வு, இணையான காலாண்டின் துவக்கத்தில் வழங்கப்படும். இவர்கள் விஷயத்தில் ஓராண்டு பணி முடிக்க வேண்டிய அவசியமில்லை. (G.O.Ms.No.41 Finance Dept, Dated 11.1.1977 மற்றும் Govt Letter No.171550அவி173 Finance Dept, Dated 1.10,1991)

(உ) ஊதிய உயர்வு நிலுவை இருப்பின், அதற்கான சான்று கையொப்பமிட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். தவறின், அடுத்த உயர் அலுவலரின் முன் தணிக்கை பெற வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலும் நிலுவையாக உள்ள இனங்களுக்குத் துறைத் தலைவரின் அனுமதி தேவை. (G.O Ms No.1285, Finance department Dated 11.10.1973 மற்றும் G.O Ms No.349, Finance department, Dated 21.5.1981)

(ஊ) தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டியிருப்பின், தேர்வுகள் நடந்த கடைசி நாளுக்கு (பிரிவுகளாக நடந்திருப்பின், பிரிவுத் தேர்வு நடந்த கடைசி நாளுக்கு) மறுநாள் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் (அடிப்படை விதி 26(எ)ன் துணை விதி (2)

தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு

(அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)

(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)

பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)

முன் ஊதிய உயர்வு

(அ) ஒரு குறிப்பிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் முன் ஊதிய உயர்வு வழங்கலாம் என குறிப்பான அரசாணை உள்ள பதவிகளுக்கு மட்டுமே, முன் ஊதிய உயர்வு வழங்கலாம்.

(ஆ) பணிக்கு வருவதற்கு முன்னரே குறிப்பிட் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (G.O Ms No.245, P&A.R., Dated 16.3.1985)

(இ) தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு ஒரு முன் ஊதிய உயர்வும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டு ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் (G.O Ms No.1755, P&A.R., Dated 22.11.1988) மேற்படி ஊதிய உயர்வு போட்டி நடைபெற்ற மறுநாள் முதல் கிடைக்கும். மொத்த பணிக்காலத்தில் இதுபோன்ற காரணத்திற்கு மூன்று ஊதிய உயர்வுகளுக்கு மேல் கிடைக்காது. இருப்பினும் மேற்படி ஊதிய உயர்வு பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்திற்குச் சேராது.

(ஈ) சார்நிலை ஊழியர்களுக்கான கணக்குத் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Number Gazette பதிவுகளைக் கொண்டு முன் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter.No. 52011 iii/873 P&A.R., Dated 13.8.1987)

(உ) உதவியாளர் பதவி உயர்வை துறக்கின்ற தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கு முன் ஊதிய உயர்வு கிடைக்காது. (G.O Ms No.10302 அ.வி. 285-2, P&A.R., Dated 4.9.1985)

(ஊ) தண்டனையாக ஊதிய உயர்வு தள்ளிப் போகின்ற நிகழ்வில் ஒருவருக்கு Advance Increment பெறுவதற்கான தகுதி கிடைத்தால் அதுவும் வழங்கப்பட வேண்டும். (Govt. Letter No. 28857 FR.177-1, P&A.R. dated 29.4.77)

பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்றால் ஊதிய உயர்வு

ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுப்பில் சென்று விடுப்பு முடிந்து மீண்டும் அதே பதவியில் சேர்ந்தால் விடுப்புக்காலம் உயர் பதவியின் ஆண்டு ஊதிய உயர்வுக்கு சேரும் (24.3.1988 வரை விடுப்புக்காலம் பதவி உயர்வுக்கு சேராது என்று விதிகள் இருந்தன) (G.O Ms No.212, P&A.R., Dated 25.3.1988)

குற்றமாக கருதப்பட்ட தற்காலிகப் பணிநீக்க காலம்

 கீழ்நிலைப் பதவியில் பணிபுரிந்த காலம் உயர் பதவிக்கு சேராது

தண்டனைக் காலம் விடுப்புகளை சேர்த்தோ அல்லது நீங்கலாகவோ என தண்டனை வழங்கப்படும் ஆணையில் குறிப்பிட வேண்டும். இருப்பினும், With Cumulative effect-ஆக தள்ளப்படும் ஊதிய உயர்வு எப்போதுமே விடுப்புக்காலம் சேர்த்துதான் இருக்கும். (விதி 24 & அதன் அறிவுரை 2 (b))

தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல்

ஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். With Cumulative effect and Without Cumulative effect என இரு வகைகள் உள்ளன.

Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.

இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால் இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.

ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR) ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆனைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால்

ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994) (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)

பணிநீக்கப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால் ஊதிய உயர்வு

(அ) தகுதிகாண் பருவம் முடித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி அமர்த்தப்பட்டால், அவர் பணிநீக்கத்திற்கு முன்னர் பெற்று வந்த ஊதியமே பெறலாம். அத்துடன் முந்தைய பணிக்காலமும், ஊதிய உயர்வுக்குக் கணக்கிடப்படும் (G.O.Ms.No.400 P&AR, Dated 7.4.1988) இதனை சாதாரணமாக ஊதியம் நிர்ணயம் செய்யும் அலுவலரே வழங்கலாம் - (Govt Letter no.44316/86-4. P&AR, Dated 29.8.1986)

(ஆ) இடைப்பட்ட பணி நீக்கக் காலம் Condone செய்யப்பட வேண்டிய தேவையில்லை (Govet Letter No.44318/86-4, Finance Department, Dated 29.8.1986)

(இ) தகுதிகாண் பருவக் காலத்தில் ஒருவருக்கு 1.4.1988 அன்று ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட தேர்வு தேறாத காரணத்தால் 1.4.1988 ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 1.4.1989 மற்றும் 1.4.1990 ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. இவர் 18.9.1990 அன்று நடைபெற்ற தேர்வில்தான் தேர்ச்சி பெறுகின்றார். இவருக்கு 1988, 1989, 1990 ஆகிய மூன்று ஊதிய உயர்வுகளும் சேர்ந்து 17.9.1990 அன்று ஒரு சேர வழங்கப்படும் என்று Rule of 28 of State and Subordinate Service Rules கூறுகிறது. இதனால் இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிரந்தரமாக Cumulative நிதி இழப்பு ஏற்படவில்லை.

(ஈ) தகுதிகாண் பருவக்காலத்தில் பயிற்சி முடிக்கவேண்டிய இளநிலை உதவியாளர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு அப்பயிற்சி முடிந்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும். அலுவலக நடைமுறை காரணமாக பயிற்சிக்கு அனுப்புவது தாமதப்பட்டால், அரசின் ஆணை பெற்று விதிகளைத் தளர்த்தி வழக்கமான நாளிலேயே ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt Letter No.6888/90-3, P&AR Dated 18.4.1990 மற்றும் G.O.Ms No. 71720 பணி-பி/92-1, P&AR Dated, 2.12.1992)

(உ) ஒரு பதவிக்கு பணி அமர்வு செய்வதற்கான தகுதிகள் அனைத்தும் ஒருவர் பெற்றிருக்கவேண்டும். ஏதேனும் ஒரு தகுதி குறைவாக இருந்தாலும் அவருக்கு ஊதிய உயர்வே கிடைக்காது. (Govt Letter No.16599A/FRI/74-3 Finance Dept, dated 21.3.1975 & G.O.Ms No.41, Finance Dept, Dated 11.1.1977)

(ஊ) பணி இறக்கம் பெறுவதைத் தொடர்ந்து ஒருவர் விடுப்பில் செல்வதால் விடுப்பு முடிந்து மீண்டும் பதவி உயர்வு பெற்று அதே உயர் பதவியில் சேர்ந்தால் விடுப்புக் காலத்திற்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது தள்ளிப் போகாது (Effective from 25.388) G.O.Ms.No.212, P&A.R., dated 25.388)

தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர்கள்

முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கலாம். இரண்டாம் உதிய உயர்வு தமிழ் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும்.

ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் பெற்றவருக்கு ஊதிய உயர்வு

1.1.96 முதல் (நிதிப்பயன்1.9.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும் (GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 8.9.1998)

ஊதிய உயர்வுக்கு சேரும் காலம் –

பணியேற்பிடைக்காலம் FR 26(d)
அயல் பணி FR-26(d)
உயர்நிலைப் பதவியின் பணிபுரிந்த காலம் கீழ்நிலைப் பகுதிக்கு சேரும் FR26(e))
பயிற்சிக்கு சென்ற காலம் - (GO.Ms.No.370, P&ARdL26689)– அனைத்து விடுப்புகள்-(FR2660)
மருத்துவச் சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பு - (FR 26 (bb)

 ஊதிய உயர்வுக்கு சேராத காலம்

மருத்துவச் சான்று அல்லாத ஊதியமில்லாத விடுப்புFR26(bb)
அனுமதித்ததற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட வரன்முறை செய்யாத விடுப்புக்காலம்

எது வெற்றி?

✌ *4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

✌ *8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

✌ *12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

✌ *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

✌ *22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

✌ *25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

✌ *30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

✌ *35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

✌ *60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

✌ *65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ *70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ *75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

✌ *80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

     *Be defeated to become victoriuos.*

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*

✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*

✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*

✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*

✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*

✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*

✌ *ஆகவே தோற்று போ,*

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..நன்றி.. 🙏

புத்தகம்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட்.
......படித்ததில் பிடித்தது!

*"GST RULES AND REGULATIONS"* -

ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு  வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.

1. Second sales  என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.

2. Online    மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

3.  உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.

4. Aggregated turnover  என்பது taxable goods +exempted good +Zero rated goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டா ITC claim  செய்ய முடியும்.

6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது.
 - 1)CGST -  Central goods and service tax.
 - 2)SGST -State goods and service tax.
 - 3)IGST - Integrated goods  and service tax.
இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல் குறிப்பிடவேண்டும்.  IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும்.   IGST =CGST +SGST.

 IGST  என்பது IT based centrally managed automated mechanism to monitor the "Inter state sales and supply of goods and services.

7.  வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.

8. Invoice ல்  விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல்  காண்பிக்க முடியும்.   Packing charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது  சேர்க்க  தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.

9.Invoiceகள் 3   copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference number வாங்கி supplementary invoice  போட்டு transport மூலம் சரக்குகள் அனுப்பலாம்.  Supplementary invoice ல் orginal invoice number குறிப்பிடவேண்டும்.  Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.

10. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல் depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.

11. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை "aggregated turnover" உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள்.  ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம்.  வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.

12. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால்    turnover limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.
13. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள்  composition  scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC  எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.

14. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
 அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

15. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை  job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.

16. Job work  கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.

17. Inter state self supplies such as stock transfer will be taxable as a taxable person has to take state wise registeration.
 B2C means supplies to unregistered person. (i. e.)business to consumers.
 B2B means supplies to registered person. (i. e.)business to business men.

18. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது  stock பொருட்களுக்கு Input credit கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC  யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு   Invoice ல் bill amount ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS  பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

19. வரி செலுத்தும் போது  கீழ்   கண்ட GST account code எழுத வேண்டும்.
CGST -Tax 00010001,          
IGST   -Tax-0002 0001
SGST  -Tax00030001
Interest, fees, penalty, additional tax ஆகியவற்றிற்கு தனி தனி account codeகள்உள்ளன.

20. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம்  படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.

21.Every registered taxable person whose aggregated turnover during a financial year exceeds one crore rupees shall get his account audited and he shall furnish a copy of audited annual accounts and a reconciliation statement duly certified in  FORM GSTR-9B,electronically through a common portal.

22. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை
unregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண்  ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.

23. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST   என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST    என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.

24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை கொடுக்கும் போது transporter  கொடுக்கும் invoice  ல் உள்ள tax யை  ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.

 25. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4  A  ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும்
 தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.

26. ஒரு வியாபாரி வேறு மாநில    Consumer அல்லது unregistered person க்கு விற்றால்,    அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000  க்கு குறைவாக  இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.

27. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும்.  அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் Internet banking, credit card, debit card, RTGS  மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT  அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும்  form உடன்  பேங்கி ல் கொடுக்க வேண்டும்.
 விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.

28. GST slab rates are
       5%,12%,18%,28%.

29. Job work  "service " என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் Unregistered job worker ஆக  இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.

30. ஒரு unregistered jobworker - யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.

31. நாம்  அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது  அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST  சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.  நம் பார்ட்டியும்  அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.

32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் receipt voucher கொடுக்க வேண்டும்.

33. வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.

34. நாம் வாங்கிய  Raw Material  (taxable goods )நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.

35. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது

36. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை  turnover செய்பவர்கள் Invoice ல்  HSN code   குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை  turnover  செய்பவர்கள் முதல் 2 degit  HSN code குறிப்பிட வேண்டும்.

37. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில்  உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில்  உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க  அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

38. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.

39. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும்  உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.

41. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு "reverse charge "முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.

42. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு  ஆகு‌ம். Commission,freight, packing  charges  சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.

43. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக  nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

44. GST நம்பர்  எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம்  இல்லை என்றாலும் nil  ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

45. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் Tax invoice க்கு  பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).

46. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.

47. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும்.  அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.

48. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில்  ஏதாவது தவறு  அல்லது  விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை  உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

49. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount  (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு ) provisional ஆக  எடுத்துச் கொள்ளப்படும்.  வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36

50. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற  ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60  மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

51. ரூபாய் ஒன்றறை கோடி வரை  டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.
52. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில்  ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய  அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63

53. GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை  அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க  அரசுக்கு  அதிகாரம் உள்ளது.

54. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

55. GST சட்டத்தின்படி மற்ற  அரசு  அதிகாரிகளும் GST  அதிகாரிகளுக்கு உதவ  அதிகாரம்  அளிக்கப்பட்டுள்ளது.

56. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை  அபராதம் விதிக்கப்படும்.  Section 85

57. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக  என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு  இருந்தால் திருத்திக்கொள்ள  அபராதம்  இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது. Section 86

58. GST சட்டத்தின்படி முறையான  ஆவணங்கள்  இல்லாமல் பொருட்களை  கொண்டு  செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம்  அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு  வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89

59. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக  இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

60. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90  நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்  .Section 167.

61. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே  அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.

62. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங் செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2

63. "Mutatis mutandis" means "the necessary changes having been made ".Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.

64. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது  அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு  கிடைத்தால் GST  சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும்.  ஆனால் 10 ம் தேதிக்குள் நமது பில்  பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும்.  இல்லாவிட்டால் mismatch என  இருவருக்கும் notice வரும்.

65. வரி விகிதத்தில் மாற்றம்  ஏற்படும் போது  "time of supply "என்பது invoice தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல்  முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.

66. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் "Aggregated turnover "கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.

67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய registration செய்து கொள்ள வேண்டும்.

68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை  ஏற்கனவே கொடுத்த  invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28

69. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு  அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும்.  Section 68

70. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும். Section 64.

அனைவருக்கும் பகிர்வது அவசியம்.

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...