*தமிழ்நாடு காவல்துறை*

*தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்..*

 *சட்டமாணவர்கள் அவசியம் இதை படிக்கவேண்டும்.*


தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.
மொத்த காவல் பணியாளர்கள் – 113602..
தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.
தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of
Police) தலைமையில் இயங்குகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.
தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).
தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன.
இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
போலீஸ் துணை பிரிவுகள் – 247.
போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.
திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.
சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.
தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.
முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது.
தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.
*காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்*
1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).
2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police).
3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards).
4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).
5] கடலோர காவல் துறை (Coastal Security Group).
6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).
7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing).
8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).
9] இரயில்வே காவல்துறை (Railways)
10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).
11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).
13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).
14] பயிற்சிப் பிரிவு (Training).
15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights).
16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic).
*பயிற்சி நிறுவனங்கள்:*
அ) போலீஸ் அகாடமி – 1.
ஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம். – 1.
இ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்) – 8 (தூத்துக்குடி / திருச்சி / வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி /விழுப்புரம் / சேலம் / மதுரை).
ஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி – அசோக் நகர்.
*தமிழ்நாடு காவல் துறையில் பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:*
1] காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) – 80,000.
2] காவல்துறைத் துணை தலைமை இயக்குனர் (ADGP) – 67000 – 79000.
3] காவல்துறை பொது ஆய்வாளர் ( Inspector General of Police ) – 37400- 67000 + 10000.
4] காவல்துறை துணை பொது ஆய்வாளர் ( Deputy Inspector General of Police ) – 37400 – 67000 + 8900.
5] காவல்துறை ஆணையர் ( Commissioners of Police ) – 37400 – 67000 + 12000.
6] காவல்துறைக் கண்காணிப்பாளர், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ( SPs, IPS including Asst. Inspector, Jt. SP, Addl. SP ) – 15600 – 39100 + 6600.
7] காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 + 5400.
8] காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) – 15600 – 39100 + 7600.
9] ஆய்வாளர் (Inspector) – 9300 – 34800 + 4900.
10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர் – பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 – 34800 + 4800.
11] தலைமைக் காவலர் (Head Constable including Women HC ) 5200 – 20200 + 2800.
12] முதல்நிலைக் காவலர் (PC-I) ( Police Constable Gr-I incl. Women PC ) – 5200 – 20200 + 2400.
13] இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) ( Police Constable Gr-II including women ) – 5200 – 20200 + 1900.
*உலகின் 10 மிகப்பெரிய போலீஸ் படைகள்:*
1. சீனா – 1,600,000 போலீஸ் அதிகாரிகள்
2. இந்தியா – 1,585,353 போலீஸ் அதிகாரிகள்
3. அமெரிக்கா: 794, 300 போலீஸ் அதிகாரிகள்.
4. ரஷ்யா – 782,001 போலீஸ் அதிகாரிகள்.
5. இந்தோனேஷியா: 579, 000 போலீஸ் அதிகாரிகள்
6. மெக்ஸிக்கோ: 544, 000 போலீஸ் அதிகாரிகள்
7. பிரேசில்: 478, 001 போலீஸ் அதிகாரிகள்
8. துருக்கி: 412, 624 போலீஸ் அதிகாரிகள்
9. நைஜீரியா: 371, 800 போலீஸ் அதிகாரிகள்
10. பாக்கிஸ்தான்: 354, 221 போலீஸ் அதிகாரிகள்.
*கடலோர பாதுகாப்பு காவல் துறையினர்:*
13591 மீன் பிடிக்கும் கிராமங்கள் அடங்கிய கடலோர மாவட்டங்கள்
6 மண்டல அலுவலகங்கள் (சென்னை / நாகை / வேதாரண்யம் / புதுக்கோட்டை / ராமநாதபுரம் / தூத்துக்குடி).
*கடலோர பாதுகாப்பு காவல் குழு உபயோகிக்கும் வாகனங்கள்:*
12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5 டன்).
8 திடமான ஊதப்பட்ட படகுகள்
6 ஜெமினி படகுகள்.
12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள்,
12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர வாகனங்கள்.
20 படகுகள்,
30 நான்கு சக்கர வாகனங்கள்,
60 இரு சக்கர வாகனங்கள்.
*தமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள்:*
குற்றம் கண்டு பிடிப்பதில் – 80 மோப்ப நாய்கள்.
வெடித்துச் சிதறும் கண்டறிதலில் – 107 மோப்ப நாய்கள்.
போதைப் பொருள் பற்றி கண்டறிய – 4 மோப்ப நாய்கள் உள்ளன.
மலைக்குன்றுகள் உள்ள இடத்தில் பணி புரிய 4 (சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருச்சி) 38 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மாநில போக்குவரத்துகளை திட்டமிட்டு சரிசெய்ய – 122 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.

*மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்*

*National digital library*

National digital library


National digital library created by Central government  for students for all subjects below is the link- https://ndl.iitkgp.ac.in
It contains 4.60crores of books. 
Please share it as much as possible to students to know and reach this priceless knowledge.

*B Sc., Agriculture*

*B Sc., Agriculture படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் முழுவதுமாக படிக்க வேண்டிய பதிவு*


*பிளஸ்டூ முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள்*

*இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’*

*படிப்புகள் :*

1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)
2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)
3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)
4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)
5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Sericulture)
6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering)
7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture)
8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology)
9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment)
10. இளம் தொழில்நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) - B.Tech. (Food Processing Engineering)
11. இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) - B.Sc. (Agriculture Business Management)
12. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தொழில்நுட்பம்) - B.Tech. (Agricultural Industrial Technology)

*யார் விண்ணப்பிக்கலாம்?*

இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ்டூவில் தேர்ச்சி தேவை. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இப்படிப்புகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு. வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், இவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1/7/2021அன்றைய நிலவரப்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பில்லை. 

*எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?*

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600, ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினர் ரூ. 300 செலுத்த வேண்டும்.

<www.tnau.ac.in> / admission.html. 
என்ற 
இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

*எங்குக் கல்லூரிகள் உள்ளன?*

*கோயம்புத்தூர் வளாகம்:*

1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

*மதுரை வளாகம்:*

1. வேளாண்மைப் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. ஹோம் சயின்ஸ் கல்லூரி அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்.

*திருச்சி வளாகம்:*

1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுனவம் குமுலூர், திருச்சி.
2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

*கிள்ளிக்குளம் வளாகம்:*

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் கிள்ளிக்குளம், திருநெல்வேலி.

*பெரியகுளம் வளாகம்:*

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், பெரியக் குளம், தேனி.

*மேட்டுப்பாளையம் வளாகம்:*

வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மேட்டுப்பாளையம்.

*ஈச்சங்கோட்டை வளாகம்:*

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.

*குடுமியான்மலை வளாகம்:*

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் குடுமியான்மலை, புதுக்கோட்டை.

*வாழவச்சனூர் வளாகம்:*

வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் வாழவச்சனூர், திருவண்ணாமலை.

*மொத்த இடங்கள்:*

B.Sc. Agriculture - 600
B.Sc. Horticulture - 125
B.Sc. Forestry - 45
B.Sc. Food & Nutrition - 45
B.Tech. (Agri. Engg) - 70
B.Sc. (Sericulture) - 30
B.Tech. (Horticulture) - 30
B.Tech. (Food Process Engineering) - 55
B.Tech. (Energy & Environment Engg.) - 55
B.Tech. (Bio Technology) - 55
B.Tech. (Bio Informatics) - 35
B.Sc. (Agri Business Management) - 45
B.Tech. (Agri Information Tech) - 30

*வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ள தனியார் கல்லூரிகள் :*

கலவை (வேலூர்), பெரம்பலூர், பொள்ளாச்சி, கண்ணனூர் (திருச்சி), நாமக்கல், தஞ்சை, குள்ளபுரம் (தேனீ), சக்தி நகர் (ஈரோடு), டி.என்.பாளையம் (ஈரோடு), தக்கோலம் (அரக்கோணம்), செம்பட்டி (திண்டுக்கல்), மா.பொடையூர் (கடலூர்), வேடச்சந்தூர் (திண்டுக்கல்), வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), சன்னாவனம் (காரைக்குடி), பேரையூர் (கமுதி), ஓசூர், உசிலம்பட்டி, ராதாபுரம் (திருநெல்வேலி), நெடுஞ்கூர் (திருச்சி) 



*பகிர்வு*

*Secret Hearts College(SHC)*

Sacred Heart College


Dear Students
Online applications have been activated for the academic year 2021-22. Interested and eligible boys and girls can apply for admissions to SHC by visiting college website: www.shctpt.edu  (Sacred Heart College)
Students are asked to bring the above notice to the knowledge of other prospective candidates. Thank you. 
Principal

*முக்கிய கமிட்டிகள்:*

முக்கிய கமிட்டிகள்:


வர்மா கமிட்டி – வணிக வங்கிகள் மாற்றம்
ரெட்டி கமிட்டி – வருமான வரியில் மாற்றம்
கொல்கார் கமிட்டி – வரிவதிப்பு மாற்றங்கள்
கேல்கர் கமிட்டி – முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
மண்டல் கமிசன் – இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
G.கெர் ஆணையம் – அலுவலக மொழிகள்
நரசிம்மன் கமிட்டி – வங்கிச் சீர்த்திருத்தம்
ராஜா செல்லையா கமிட்டி – வரிச் சீர்திருத்தம்
V.ராஜ மன்னார் கமிட்டி – மத்திய மாநில உறவுகள்
M.குன்சிங் – மத்திய மாநில உறவுகள்
தினேஷ் கோஸ்வாமி – தேர்தல் சீர்திருத்தம்
M.லிண்டோ – மாணவப்பருவ அரசியல்
M.கிர்பால் கமிட்டி – தேசிய வன ஆணையம்
மொராய்ஜி தேசாய் – முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
வீரப்ப மொய்லி – இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
பல்வந்த்ராய் மேத்தா – மூன்றடுக்கு பஞ்சாயத்து
அசோக் மேத்தா – இரண்டடுக்கு பஞ்சாயத்து
M.D.ராவ் – பஞ்சாயத்து
M.சிங்வி – பஞ்சாயத்து
மாதவ் காட்கில் – மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
கஸ்தூரி ரங்கன் – மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
சோலி சொராப்ஜி – காவல்துறை சீர்திருத்தம்
பசல் அலி – மாநில மறுசீரமைப்பு ஆணையம்
ராம்நந்தன் பிரசாத் – பாலேடு வகுப்பினர்
பத்மநாபன் கமிட்டி – வணிக வங்கிகளின் நிலை
ரகுராம் ராஜன் – நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
T.நானாவதி – 1984 – சீக்கியக் கலவரம்
பட்லர் கமிட்டி – இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
முடிமன் கமிட்டி – இரட்டை ஆட்சி
அஜித்குமார் கமிட்டி – இராணுவத்திற்கான சம்பளம்
C. பாபு ராஜீவ் கமிட்டி – கப்பல் துறையில் மாற்றங்கள்
கான் கமிட்டி – நிதி நிறுவனங்கள் முன்னேற்றம்
அபிஜித் சென் கமிட்டி – நீண்ட கால உணவுக் கொள்கை
கோத்தாரி குழு – கல்வி சீர்திருத்தம்
யஷ்வால் குழு – உயர்கல்வி
பானு பிரதாப் சிங் – விவசாயம்
M.N.வோரா – அரசியல் கிரிமினல்கள்
J.M.லிண்டோ – மாணவப்பருவ அரசியல்
B.M.கிர்பால் கமிட்டி – தேசிய வன ஆணையம்
சந்திரத்தா கமிட்டி – பங்கு சந்தை
UK ஷர்மா கமிட்டி – RRB செயல்பாடு, NABARD செயல்பாடு
சப்தரிஷி கமிட்டி – உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம்.

*CTET Certificate - Lifetime Validity - மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..!*



*ஆசிரியர் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..!*

டெல்லி: ஆசிரியர் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த உத்தரவு 2011 முதல் ஆசிரியர் தேர்வு சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொருந்தும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது

_*ஆசிரியர் தகுதித் தேர்வு  தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் வரை (From the Year 2011) நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.*_

_*ஏற்கனவே வழங்கிய TET சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்து புதிய சான்றிதழ் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்.*_

*TNPSC ALL GROUPS*

*TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா?*


*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு? How Many Groups in TNPSC?*

குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3, குரூப் – 4, குரூப் – 5, குரூப் – 6, குரூப் – 7, குரூப் – 8

குரூப் – 1 சேவைகள் (Group-I) 

துணை கலெக்டர் (Deputy Collector) 
துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police) 
மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை (District Registrar, Registration Department) 
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) /கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector) 
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) 
தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் (Div. Officer in Fire and Rescue Services) 
உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner) 
கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)


குரூப் – 1A சேவைகள் (Group-I A) 
உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

குரூப் – 1B சேவைகள் (Group-I B) 
உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)

குரூப் – 1C சேவைகள் (Group-I C)

மாவட்ட கல்வி அலுவலர் DEO (District Educational Officer)


ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 

குரூப் – 2 சேவைகள் (நேர்முகத்தேர்வு பதவிகள்) (Group-II) 

துணை வணிக வரி அதிகாரி 
நகராட்சி ஆணையர், தரம் -2 
இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்) 
இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்) 
துணை பதிவாளர், தரம் -2 
தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை) 
உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை) 
உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை) 
தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு 
உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர் 
உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை 
நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு 
நன்னடத்தை அலுவலர், சிறைத் துறை 
தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் 
பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு 
சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் 
வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை 
திட்ட உதவியாளர் ஆதி-திராவிதர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை 
தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர் இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை 
உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை
மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை 
உதவி ஜெயிலர், சிறைத்துறை 
வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில் 
நிர்வாக அதிகாரி, தரம் -2 டி.வி.ஐ.சியில் 
சிறப்பு உதவியாளர் 
கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில் 
சிறப்பு கிளை உதவியாளர். 
பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு 
தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.


குரூப் – 2A சேவைகள் (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A) 

கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர் 
ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில் 
உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர) 
இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை 
தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர) 
தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை) 
தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை) 
தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு 
தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம் 
தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை 
உதவியாளர் பல்வேறு துறைகள் 
செயலகத் துறையில் உதவி (நிதித்துறை) 
தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர் 
தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம் 
திட்டமிடல் இளைய உதவியாளர் 
வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை) 
சட்டத்துறையில் உதவியாளர் 
தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்


ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3
குரூப் – 3 சேவைகள் (Group-III)
தீயணைப்பு நிலைய அதிகாரி


குரூப் – 3A சேவைகள் (Group-III A) 

கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர் 
தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் 
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2


குரூப் – 4 சேவைகள் (Group-IV) 

1.இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத) 
2.பில் கலெக்டர் 
3.தட்டச்சு செய்பவர் 
4.ஸ்டெனோ-டைப்பிஸ்ட், 
5.கிரேடு -3 கள ஆய்வாளர் 
6. வரைவாளர்


குரூப் – 5A சேவைகள் (Group-V A)

செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)


குரூப் – 6 சேவைகள் (Group-VI)
வன பயிற்சியாளர்


குரூப் – 7A சேவைகள் (Group-VII A) 
நிர்வாக அதிகாரி, தரம் -1

குரூப் – 7B சேவைகள் (Group-VII B) 
நிர்வாக அதிகாரி, தரம் – 3

குரூப் – 8 சேவைகள் (Group-VIII) 
நிர்வாக அதிகாரி, தரம் – 4

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...