*சட்டம் அறிவோம்.*

*சட்டம் அறிவோம்.*..⚖️

*பட்டா என்றால் என்ன* 
பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம்.

👉யு.டி.ஆர் பட்டா,
👉நத்தம் நிலவரி திட்டம் 
👉தோராய பட்டா
 👉தூய பட்டா
 👉ஏ.டி.கண்டிசன் பட்டா , 
👉நில ஒப்படை பட்டா  👉டி.எஸ்.எல்.ஆர் பட்டா
👉தூசி பட்டா
👉தனிபட்டா
👉கூட்டு
பட்டா

இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்!
பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர்
பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும்.
கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்
அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!

 யு.டி.ஆர் பட்டா காண்போம்!
யூ.டிஆர்.பட்டா
மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து
(வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒமுங்குபடுத்தும் வேலையை போல்) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர. பட்டா (Updating Data Registry ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள் (Know your Tamil nadu property Patta Chita details and Download it Free)
அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம், தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.
மேனுவல் பட்டா
இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவில் தான் நடக்கிறது
பட்டாவில் பெயரை சேர்த்தல், பட்டாவில் பெயரை மாற்றுதல், பட்டாவில் சர்வே எண் உட்பிரிவு செய்தல், போன்ற வேலைகளுக்கு இன்னும் பலர் அரசு,எந்திரத்துடன் போராடி வருகின்றனர்
இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்
இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தன் பூட்டன் ,தாத்தா, பங்காளி ,அப்பா பெயரில் இருக்கும் பட்டாவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கிறார்கள்
இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் புரியும்

2. நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா:
************************
தோராய பட்டா பின்பக்கம்
தோராய பட்டா முன்பக்கம்
யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைகாரன் காலத்திலேயே வகை படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது
பெரும்பாலும் நத்தம் நிலம் பழைய ஊர்களிலேயே அமைந்து இருக்கும்.அந்த நத்தம் நிலத்திற்குதான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்
ராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது
நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் ( பிழைகள், தவறுகள் இருக்கலாம் ) அதில் ஏதாவது சிக்கல்கள்,பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா! ழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும்
அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூயபட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவலாகவே இருக்கும்
பட்டா ஆவணத்தின் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் வரையபட்டு இருக்கும்.
ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வாங்கிவிட்டாடோம் என்ற சந்தாதோஷத்தில் இருந்து விடுவார்கள். அதில் அளவுபிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துகொள்ள வேண்டும்
ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை இவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடுத்தபடவில்லை, தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்

தூய பட்டா:
நத்தம் நிலத்திறகு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண்டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரி விதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம் ,பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும் போது
பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது
எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர் தூயபட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்

3. ஏ.டி கண்டிசன் பட்டா
ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டுமனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி , பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்
அப்படி ஒப்படை செய்யும் போது , கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனிவட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்
முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்
இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு 5௦ சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்

4. நில ஒப்படை பட்டா:

நில ஒப்படை பட்டா
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும். !
முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் , நலிவுற்றவர்கள், அரவாணிகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.

5. டி.எஸ்.எல்.ஆர் பட்டா:

டி.எஸ்.எல்.ஆர் பட்டா
டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம் . இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்களை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணகளில் இருந்து பொதுமக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள்
இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் .
கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது , அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும்
ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யபடுகிறது

6. தூசி பட்டா:
தூசி பட்டா
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கபடுகிறது
அரசு நிலத்தின் மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள் , கனி தரும் மரங்கள், ) மரங்களை அனுபவிக்க பராமரித்து கொள்ள , மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்

7. கூட்டு பட்டா:
தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூடுப்பட்டா , கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB – சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல் ) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்
நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டாவில் இருக்கும் ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப்பட்டு இருக்காது, பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டவை விட தனிப்பட்டா சிறந்தது.
தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா

8, தனிபட்டா என்பது
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும்  மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப் டிவிசன் செய்யப்பட்டு இருக்கும்
பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.
புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப்பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப் டிவிசன் , ஆகியவற்றில் 1௦௦% தெளிவாக இருக்கும்
யு.டி.ஆர் பட்டா,நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா ஏ.டி.கண்டிசன் பட்டா , நில ஒப்படை பட்டா , டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கபடுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது
தனிபட்டா கூட்டுபட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்...

*தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!*

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.

🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.

🌏400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.

🌏200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.

🌏உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.

🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....

🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...

🌏100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...
குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் ....

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!

🙏தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!

🙏தமிழன்டா..........   
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

கண்டிப்பாக படித்து பகிரவும் ....

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை 
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

'''வாழ்க தமிழ் வளர்க தமிழ்.'''நன்றி மணி மாறன் காளிங்காராயர்
**********************************

*ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை*


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் (மின்ஆளுமை) அவர்களின் செயல்முறைகள் - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்படுவதில்லை. பணியில் சேர்ந்த நாளையே பணிவரன்முறை செய்யப்பட்ட நாளாக கருதப்படும்

*"http" மற்றும் "https" என்னும் வார்த்தைகள்*

🌷தயவு செய்து படியுங்கள் நண்பர்களே...🌷

*"http" மற்றும் "https" என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

 பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம், 

இதை அறிய 32 லட்சம் டெபிட் கார்டுகள் பறிகொடுத்துள்ளோம். 

இருந்தபோதும் வித்தியாசம் என்னவென்று சிலர் அறிந்திருப்பீர்கள்.

அறியதவருக்கு இப்பதிவு.

நம் டெபிட் கார்டின் பாதுகாப்பு பற்றிய அறிகுறி தான் "http" மற்றும் "https" இவற்றின் வித்தியாசம்.

"http" என்பது "Hyper Text Transfer  Protocol" என்பதைக் குறிக்கும்.

"s" என்பது இணைந்தால்,  "Secure" என்பதைக் குறிக்கும். இணையதளத்தில் நாம் பார்த்தால் முதல் வார்த்தை "http://" என்றுதான் வரும். 
 
இதன் பொருள் தங்கள் இணையதளம் பாதுகாப்பற்ற இணைய முகவரியில் தங்களை இணைத்துள்ளது என்பதே.. இது தங்கள் கணினியின் மொழிகளை
தாங்கள் உள்நுழைந்த இந்த இணையமுகவரி மூலம் ஒட்டுக்கேட்கவும் வகை செய்யும். இப்படிப்பட்ட இணையமுகவரியில் தாங்கள் நுழைந்து பூத்தி செய்யும் தனிப்பட்ட விண்ணப்பங்களை பிறர் தாராளமாக பார்க்க முடியும்.
      
எனவே தங்கள் கிரெடிட் கார்டு எண்களையோ பாஸ்வேர்டுகளையோ,

இந்த "http//" இணையமுகவரியில் தயவு செய்து பதிவிடாதீர்கள்.!

அதே சமயம் தங்கள் இணைய முகவரி "https://" என ஆரம்பித்தால், தங்கள் கணினி பாதுகாக்கப்பட்ட இணையமுகவரியில் உங்களை நுழைத்துள்ளது என அறியுங்கள். 

இதிலிருந்து நமது தகவல்கழை ஒட்டுக்கேட்கவோ சேகரிக்கவோ முடியாது.

இந்த S என்ற ஒற்றை எழுத்து சேர்வதன் பாதுகாப்பும், நம்பகத் தன்மையும் S இல்லாத இணையமுகவரி இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும் தற்போது தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

இனி எந்த இணைய முகவரிக்காவது உங்கள் கிரெடிட் கார்டு எண் பதிவிட வேண்டும் என்றால், முதலில் இந்த வித்தியசத்தை கவனித்துவிட்டு, பிறகு பதிவிடுங்கள்.

எந்த இணைய முகவரியைத் தேடும் போதும், முதலில் இணைய களம் எதில் முடிகிறது எனப் பார்க்கவும்.  (Eg: ".com"  or ".org", ".co.in", ".net"  etc).* இவற்றின் முன் உள்ள பெயர் மட்டுமே இணைய களப்பெயர்.
      
.Eg: "http://amazon.diwali -festivals.com" என எடுத்துக் கொள்வோம்.


இதில் ".com" என்பதற்கு முன்னால் உள்ள "diwali-festivals" ("amazon" என்பது அல்ல) என்பதுதான் அந்த இணையகளத்தின் முகவரி. எனவே இது "amazon.com" இணையதளத்தைச் சேர்ந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது "diwali-festivals.com" எனும், நாம் இதுவரை அறியாத ஓர் இணைய களத்தைச் சேர்ந்தது.

இதே வழியில் வங்கித் திருட்டுக்களையும் தாங்கள் கண்டறிய முடியும். 

தங்கள் வங்கியுடனான இ-சேவையைத் தொடங்கும் முன்னர், மேலே கூறியது போல், ".com" எனும் வார்த்தயை ஒட்டி, அதன் முன்னால், உங்கள் குறிப்பிட்ட வங்கியின் பெயர் உள்ளதா எனமுதலில் கவனியுங்கள். Eg: "icicibank.com" என்பது icici வங்கியைச் சார்ந்தது; 

ஆனால் , "icicibank.'வேறு ஏதோ வார்த்தை'.com" என வந்தால், அது iciciவங்கியுடையது அல்ல. 
அந்த‌ _"வேறு ஏதோ வார்த்தையுடையது.

 _👆இது பார்க்க சாதாரண விஷயமாகத் தோன்றும். 

ஆனால் இந்தத் தவறால் பணம் இழந்தவர்கள் பலர்.👆_

தயவு செய்து பிறருக்கும் அனுப்புங்கள். தவறிலிருந்து நம் மக்கள் விழிப்புணர்வு பெற்று வாழட்டும். 
நன்றி🙏🙏🙏

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...